Show all

தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க இந்தியா எல்லையில் லேசர் தடுப்புச் சுவர்

 

     தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க பஞ்சாப் மாநிலத்துக்கு உட்பட்ட இந்தியா பாகிஸ்தான் எல்லையில் லேசர் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுவர் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த லேசர் சுவர் மிகுந்த தொழில்நுட்பத்துடன் கூடியதால் மூடு பனி காலங்களிலும் இது செயல்படும்.

இந்த லேசர் சுவர் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்னதாக அரசு திட்டமிட்டிருந்தது. தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதப்படும் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் அமைந்துள்ள சில எல்லைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அகச்சிவப்பு மற்றும் லேசர் கற்றை சுவர்களை நிறுவும் பணிகளை எல்லை பாதுகாப்பு படை மேற்கொண்டது.

லேசர் விளக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் சுவர் அதிநவீன தொழில்நுட்ப கண்காணிப்பு முறையாகும். இந்த லேசர் விளக்குகள் சுவர் போன்று மெல்லிதாக நீண்டிருக்கும். இதை தாண்டிச் சென்றால், உடனடியாக சக்தி வாய்ந்த சைரனை ஒலிக்கச் செய்யும். எந்த இடத்தில் ஊடுருவல் நடந்தது என்பதையும் கம்ப்யூட்டர் மூலம் அறிய முடியும். உடனடியாக அப்பகுதிக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, தீவிரவாதிகளையோ, கடத்தல்காரர்களையோ பிடிக்க முடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.