Show all

பண்பாட்டு விழாவான திருமண விழா பனிக்குழைவால் பாழ்பட்டது

உத்தர பிரதேசத்தில் ஐஸ்கிரீம் பற்றாக்குறையால் திருமணம் நின்று போனது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மகேஷ்நகர் என்ற காலனியில் இரு குடும்பத்தாரின் ஒப்புதலோடு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் ஐஸ்கிரீம் சப்ளை செய்யப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் ஐஸ்கிரீம் காலியானது. ஐஸ்கிரீம் கிடைக்காமல் ஆத்திரமுற்ற மாப்பிள்ளை வீட்டார் தகராறில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பெண் வீட்டாருக்கு, மாப்பிள்ளை வீட்டாருக்கும் முதலில் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடைசியில் இருவீட்டாரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்தத் திருமணத்திற்கு வந்த பலரும் காயம் அடைந்தனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இரு வீட்டாரிடமும் சமாதானத்தில் ஈடுபட்டனர்.

பெண் வீட்டார் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் கோபம் அடைந்த பெண் வீட்டார் காவல்துறையினரைச் சரமாறியாக தாக்கினர்.

மேலும் காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு காவலர் இரண்டு துணைக் காவல்ஆய்வாளர் காயம் அடைந்தனர். மேலும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய பெண் வீட்டார் 7 பேரை கைது செய்தனர்.

 

இந்த வன்முறையால் திருமணம் நின்று போனது. மகிழ்ச்சியாக வந்த மணமகன் கடைசியில் சோகத்துடன் வீடு திரும்பினார்.

 

இரு வீட்டார் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.