Show all

மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு

கொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.

  • ஊளைச சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்புவில் உள்ளது. மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர்  வெளியேறிவிடும்.                      
  • பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது, வெள்ளைப் படுதல் மற்றும் வெள்ளைப்  போக்கைக்  கட்டுப்படுத்த உதவும்.    
  • கொள்ளை தினசரி உணவுகளில்  சேர்க்க கூடிய அவியல், துவையல், இரசம், பொறியலாக சமைக்க முடியும்.
  • கொள்ளு உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளதாகவும் ,தொந்தி மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
  • ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மிளகு, சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது. 
  • கொள்ளை ஆட்டி பால் எடுத்து  தண்ணீர்க்குப் பதில் அதை சூப் வைத்தால் இன்னும்  சுவையாக இருக்கும்.
  • கொள்ளை வேகவைத்து எடுத்த நீரை குடிப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.