Show all

ஐபேசிக்குக் கைகொடுத்திருப்பது இந்திய சந்தைதான்.

 

     ஐபேசி புதுமாடல் அறிவித்து விற்பனை தொடங்கிய முதல் நாளே வரிசையில் நின்று வாங்கியவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு உலகையே தனக்குள் கட்டிப்போட்டு வைத்திருந்தது ஆப்பிள் நிறுவனம்.

சமீபத்திய ஐபேசி6எஸ், 6எஸ்பிளஸ் போன்ற புதுவரவுகளுக்கும் இதே வரவேற்பு இருந்ததுதான்.

இருப்பினும், ஐபேசியை விட குறைந்த விலையில் அதிக வசதியுடன் வந்த ஆன்டிராய்டு, ஆப்பிள் சந்தையை கொஞ்சம் ஆட்டிப்பார்த்து விட்டது.

இதில் சீனாவுக்கும் கணிசமான பங்கு உண்டு. இதனால், செல்பேசி சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஆப்பிள் நிறுவன ஐபேசி விற்பனை சர்வதேச சந்தையில் முதல் முறையாக சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வருவாய் 13விழுக்காடு சரிந்து, லாபத்தில் 22விழுக்காடு நஷ்டமடைந்திருக்கிறது ஆப்பிள். அமெரிக்கா, சீனாவிலேயே இந்த கதி.

கைகொடுத்திருப்பது இந்திய சந்தைதான்.

இந்தியாவில் கடந்த ஆண்டை விட ஐபேசி விற்பனை 56 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் ஆப்பிள் சிஇஓ டிம் குக்.

இந்தியா என்றாலே இளக்காரமாக பார்த்து வந்த ஆப்பிள் நிறுவனம், தற்போது இந்தியா பக்கம் கவனம் செலுத்த தொடங்கிய திடீர் அக்கறையும் இதற்கு காரணம் என்றாலும், ஆன்டிராய்டு சுனாமியிலும் ஐபேசி மோகம் இந்தியாவை விட்டு இன்னும் விலகவில்லை என்பதையும் மெய்ப்பிக்கிறது என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.