Show all

அர்ஜென்டினா கைப்பற்றியது வெற்றிக் கோப்பையை! உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில்

அர்ஜென்டினா கைப்பற்றிய வெற்றிக் கோப்பைக்கான உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டை மகிழ்ந்து கொண்டாடினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கால்பந்தாட்ட நயவர்கள்.

04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிவிட்ட, தமிழர்தம் முதலும் மூலமுமான கருத்துப் பரிமாற்றக் கருவியான நாடகத்தமிழின், தொடர்ச்சியான விளையாட்டின் நீட்சிதானே இந்தக் கால்பந்தாட்டம். 

இதில் வெற்றி தோல்வி என்பது இன்றையக் கொண்டாட்டத்திற்கு உரியதுதானே! விளையாட்டின் விளைபயன்தானே முதன்மை என்ற கோணத்தில், அர்ஜென்டினா கைப்பற்றிய வெற்றிக் கோப்பைக்கான உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டை மகிழ்ந்து கொண்டாடினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கால்பந்தாட்ட நயவர்கள்.

22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 32 நாடுகள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில் இறுதி போட்டிக்கு அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் தேர்வாகின.

இந்த நிலையில் இறுதி போட்டி நேற்று இரவு லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்றது. இறு அணிகளும் கோப்பையை வெல்ல முனைப்புடன் விளையாடிய நிலையில் ஆட்டம் பரபரப்பாக சென்றது.

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை தண்ட அதிரடி வெளியேற்றம் (பெனால்டி சூட் அவுட்) முறையில் 4-2 என்ற இலக்குக் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது. 

வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு பரிசு தொகையாக ரூ.347 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.248 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

அர்ஜென்டினா வெற்றி பெற்றதை புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சென்னை கன்னியாகுமரி கோவை திருச்சி உள்பட பல்வேறு பெரு நகரங்களில் அகன்ற திரையில் திறந்தவெளியில் நயவர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
 
புதுச்சேரியில் பிரான்ஸ் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத பிரான்ஸ் நயவர்கள் கண்ணீர் விட்டு தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

அதே நேரம் அர்ஜென்டினா வெற்றியை தமிழ்நாடு, புதுச்சேரி நயவர்கள் விழா கொண்டாடுவது போல பட்டாசு வெடித்தும், குதுகலமாக நடனமாடியும் மகிழ்ந்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,467.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.