Show all

ஐயர்! தமிழ்முன்னோர் கண்ட புதிய சொல்லாடல்

தமிழ்முன்னோர் கண்டவோர் ஐயர் என்கிற சொல்லாடலை, எப்படியெல்லாம் புழங்க வேண்டும்? அந்தச் சொல்லாடலில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருள் யாது? என்பதை விளக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

05,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126:

தமிழ்மொழிக்கும், தமிழர் வாழ்க்கைக்கும் தமிழ்முன்னோர் பின்பற்றி வந்த காப்புக் கோட்பாடுகளை (இலக்கணம்) தொல்காப்பியர், ஒன்பது ஒன்பது தலைப்புகளில் அமைத்த காரணம் பற்றி- தொல்காப்பியம் என்று தலைப்பிட்ட நூலாக தமிழ்நிலத்திற்கு வழங்கினார்.

பாலூட்டி சீராட்டி, பிள்ளைத்தமிழ்பாடி வளர்த்த தங்கள் பெண் பிள்ளை களவுஅகவை எய்தியதும், யாரென்றும் அறியாது, தந்தைவழி தாய் வழி அறியாது, ஓர் ஆண்மகனால் அன்புடை நெஞ்சம் கவரப்பட்டு- உறவறியாமல், ஊரறியாமல் களவில் ஈடுபட்டு வந்து, ஒரு எல்லையில் கற்பில் புகும் நோக்கத்தில் உற்றார் உறவினரைப் பிரிந்து உடன்போக்கில் பிரிந்த காரணம் பற்றி பேரளவாக கவலைபட்டிருந்திருக்கவில்லை தமிழ்க்குடும்பத்தினர். அது தமிழ்மக்களின் அகத்திணை மரபாக முன்னெடுக்கப்பட்ட காரணம் பற்றி.

தன், பெண் பிள்ளையிடம் களவில் ஈடுபட்ட ஆண்மகனிடம் பொய்யும் வழுவும் தோன்றி, தங்கள் பெண்பிள்ளை கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட போதுதான், அந்தப் பெண்பிள்ளைக்கு ஆதரவாக நின்ற குடும்ப உறுப்பினர்கள் ஐவர் கலந்து பேசி அடுத்த பெண்பிள்ளைக்குப் பாதுகாப்பு முன்னெடுப்பாக ஒரு கரணத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. 

அந்தக் குடும்பத்தில் களவுஅகவை எய்திய ஒரு பெண்பிள்ளை, பெற்;றோர் தம்பி தங்கை அறியாது, முன்னெடுக்கிற உடன்போக்கின் பிரிவாற்றாமையைத் தவிர்க்கும் பொருட்டும் உடன்போக்கைத் திருமணமாக மாற்ற ஒரு கரணத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது.

உடன்போக்கைத் திருமணமாக மாற்றும், கரணத்தை உருவாக்கிய குடும்ப உறுப்பினர் ஐவரைச் சுட்டவே ஐயர் என்கிற தலைப்பை முன்னெடுத்தனர் தமிழ்முன்னோர்.

1.களவில் ஈடுபட்டிருக்கும்; பெண்பிள்ளை 2.அவளின் அம்மா 3.அப்பா 4.தங்கை 5.தம்பியே அந்த ஐயர் ஆவர். ஐயர் என்பது பன்மைச் சொல்லாடல் என்கிற காரணம் பற்றி, 

அதற்கு ஐயன் என்கிற ஒருமைச் சொல் அப்பாவையோ, தம்பியையோ குறிப்பது ஆகும். ஐயை என்கிற ஒருமைச் சொல் களவில் ஈடுபட்டிருக்கும்; பெண் பிள்ளையையோ, அந்தப் பெண்பிள்ளையின் அம்மாவையோ, அந்தப் பெண்பிள்ளையின் தங்கையையோ குறிப்பதற்கு உரியது ஆகும்.

களவில் ஈடுபட்டிருக்கும்; பெண்பிள்ளை, கற்பில் நுழையவுள்ள தருணத்தில், அந்தப் பெண்பிள்ளையின் அன்புடை நெஞ்சம் கவர்ந்தவன், பொய்யும் வழுவும் உள்ளவனாக இருந்துவிடக் கூடாது என்கிற காப்பு நோக்கில், அந்தப் பெண்பிள்ளையின் அன்புடை நெஞ்சம் கவர்ந்தவன் பொய்யும் வழுவும் முன்னெடுக்கக் கூடியவனா? என்கிற ஐயம் கொண்ட 1.களவில் ஈடுபட்டிருக்கும்; பெண்பிள்ளை 2.அவளின் அம்மா 3.அப்பா 4.தங்கை 5.தம்பி ஆகிய ஐவருக்கு, ஐயம் கொண்ட ஐவர் என்பதாக ஐயர் என்ற புதிய சொல்லாடலை இந்த வகைக்கு முன்னெடுத்தனர் தமிழ்முன்னோர்.

ஐயனுக்;குப் பன்மையாக ஐயன்கள் என்றோ, ஐயைகளுக்குப் பன்மையாக ஐயைகள் என்றோ சொல்லாடல்களை முன்னெடுக்க முடியும். 

ஐயை என்கிற இந்த அழகிய தமிழ்ச்சொல்லுக்கு வலு சேர்க்கும் வகைக்கு, ஒரு களவுத்தலைவி குறித்த கதையாடலாக, ஐயை என்கிற தலைப்பில் ஒரு யாப்புஇலக்கியம் படைத்துள்ளார்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.

ஐயம் தெளிந்தவர்கள் என்கிற பொருளில், பெரியவர்களை, சான்றோர் பெருமக்களை, ஆசிரியர்களை ஐயா என்று தமிழ் நெடுங்காலமாக தமிழ் புழங்கி வருகிறது.

ஆனால் ஐயருக்கு ஐயர்கள் என்று ஒரு பன்மைச் சொல்லை முன்னெடுப்பது மக்களுக்கு மக்கள்கள் என்று ஒரு பன்மைச் சொல்லை முன்னெடுப்பது போன்ற பிழையாகும். 
 
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

என்கிற, தொல்காப்பியத்தில் கற்பியலில் அமைந்த இந்த நூற்பா, மேலே நாம் பேசிய அத்தனையையும் விளக்குவது ஆகும்.

பெண்ணுக்குப் பரியம் போடுவது, பெண் அழைப்பது, மணமக்களை ஊர்வலம் அழைத்து செல்வது, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தெடுக்கப்பட்ட, உலகிற்கே கொடையாக அமைந்த தமிழர் திருமணம்

வரதட்சனை, பார்ப்பனியரை வைத்து திருமணம் நடத்துவது, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற திருமண ஒழுங்கையே கேள்விக்குள்ளாக்குகிற ஒருத்திக்கு இவர் ஐந்தாமர் என்கிற சமஸ்கிருத யாப்பு ஓதப்படுவது போன்ற அயல் ஆட்சிக்கு பலியாவதான நடைமுறைகளோடு நடப்பில் பேரளவு திருமணங்கள் முன்னெடுக்கபட்டு வருகிறது. 

உலகுக்கு தமிழ்முன்னோர் அளித்த கொடையான திருமணம்! அயலவர் வருகைக்கு முந்தைய நாட்களில், எப்படி முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதை, இந்தக் கட்டுரையில் அறிந்து தெளியலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.