Show all

நாவலந்தேய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி

நாவலந்தேய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி, தென்நாவலந்தேய மக்கள் கொண்டாடும் வகைக்கு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடநாவலதேய மக்களும், வாக்கு எந்திரங்களும் (வாக்கு எந்திரங்களைக் கையாளும் அதிகாரிகள்) இதைக் கொண்டாடினானல் உறுதியாக நாவலந்தேயத்திற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. 

24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125:

நாவலந்தேய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி Indian National Developmental Inclusive Alliance भारतीय राष्ट्रीय विकासात्मक समावेशी गठबंधन:

நாவலந்தேயத்தில் நடந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தலைமைஅமைச்சர் மோடியின் ஆட்சியில் நடக்கும் பெரும்பான்மைவாதம், ஊழல்வாதம், அரசுடமையை தனியார் மயமாக்கல், தனியார்மய வாதம், மக்களுக்கு எதிரான பொருளாதார விலைவாசி உயர்வு ஆகியவற்றை முன்னெடுக்கும் ஆட்சியை வீழ்த்துவதற்கு நாவலந்தேய அளவிலான மாநில கட்சி தலைவர்கள் இணைந்து காங்கிரஸ் கட்சியை நடுவாகக் கொண்டு நாவலந்தேய நாட்டில் மதச்சார்பின்மை, முற்போக்குவாதம், பொதுவுடைமை, சோசலிசம் கொள்கையை மீண்டும் மீட்டேடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். 

இக்கூட்டணி 2024 நாவலந்தேய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியை எதிர்நோக்கும் விதமாக இந்தியாவில் உள்ள 26 அரசியல் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளனர்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக் கழகம், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பீகாரில் லாலு பிரசாந்த் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேவின் சிவ சேனா, அரவிந் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி,  போன்ற கட்சிகள் நாவலந்தேயக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மாநில கட்சிகள் ஆகும்.

இவை தவிர நாவலந்தேயக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை நடுவாகக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இடம் பெற்றுள்ளனர்.

நாவலந்தேயக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்:

மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் 

உணவு, உடை, காதல், திருமணம் ஆகியவற்றில் ஒன்றிய அரசு ஒருபோதும் தலையிடாது 

02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125 (2024,மார்ச்,15) வரை பெறப்பட்ட மாணவர்களுடைய கல்விக் கடன் முழுமையாக ரத்து

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் உரிமைத் தொகை 

நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் வழங்கப்படும் 

மாநில அரசோடு கலந்தாலோசித்த பிறகு ஒன்றிய பட்டியலில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்

அண்டை நாடுகளால் மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்படும்

ஒன்றிய அரசு பணி இடங்களில் பெண்களுக்கு 50விழுக்காடு இட ஒதுக்கீடு.

பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டுவதை தடுக்க ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் 

100 நாள் வேலை திட்டத்திற்கான அன்றாட ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்

தற்காலிகமாக இராணுவப் படையில் சேரும் அக்னிபாத் திட்டம் ரத்து

பாஜக இயற்றிய சரக்குசெவைவரி ரத்து செய்யப்பட்டு புதிய சரக்குசேவைவரி இயற்றப்படும்

சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினால் உடனடியாக பதவி பறிபோகும் வகையில் சட்டம் இயற்றப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறை படுத்தப்பட மாட்டாது

தொடர்வண்டிப் பயணங்களில் பாஜக அரசு நீக்கிய முதியோர்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்

அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக தனித்துவம் பேணப்படும். 

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்

பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி குறித்த பாடங்கள் சேர்க்கப்படும்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி 

சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு சராசரி கல்வி தகுதி, திறன் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் 

புதுச்சேரி மற்றும் காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும் 

10 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்படும்

நாவலந்தேயத்தின் இரண்டாவது விடுதலையை நோக்கியதாக அமைந்துள்ளதாகவும், நடப்பு பராளுமன்றத் தேர்தலின் கதைத்தலைவனே இந்த தேர்தல் வாக்குறுதி என்று பேரளாவான பாராட்டு பெற்று வருகிறது நாவலந்தேயக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,941.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.