Show all

ஒரிசாவில் கனமழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு மக்கள் அவதி

ஒரிசாவில் கனமழை காரணமாக 5 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒரிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் மட்டுமின்றி குடியிருப்புப்பகுதிகளுக்குள்ளும் தண்னீர் புகுந்தது. முக்கிய நதியான பைதாரணி நதி மற்றும் அதன் கிளை நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாயும் சுபர்நரேகா நதியில், அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

இதன் காரணமாக இருமாநிலத்திலும் ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட இடங்களில், பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை இருமாநில அரசுகளும் விரைவு படுத்தியுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.