பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமிக்கு இன்று கருக்கலைப்பு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச்சேர்ந்த 14 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றபோது அவரை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அந்தச்சிறுமி கருவுற்றார்.இதையடுத்து கருவைக் கலைத்திட சிறுமியின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளை குஜராத் நீதிமன்றங்கள் நிராகரித்தன.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்திட அனுமதி அளித்தது. கரு, கலைக்கப்பட்டால் மட்டுமே அந்தச்சிறுமி உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து இதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மருத்துவர்களின் உரிய கண்காணிப்பில் கருக்கலைப்பு நடத்தவேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து நாளை காலை 10 மணியளவில், அகமதாபாத் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்படுகிறது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.