Show all

கர்நாடகாவில் தொடர் கனமழை! கபினி அணையிலிருந்து வினாடிக்கு 60,000 கன அடி நீர் திறப்பு

கர்நாடகத்தில் இந்திய விடுதலைக்குப் பின், ஆற்று நீர் பங்கீட்டு உலக விதிகளின் அடிப்படையில் கிருட்டின ராஜசாகர் அணை கட்டப்பட்டது.  ஆனால் அடாவடியாக காவிரியின் குறுக்கே மேலும் (கபினி, ஹேமாவதி, ஹேரங்கி) மூன்று அணைகளை கட்டிக் கொண்டு கூடுதல் நீரைச் சேமித்து வைத்துக் கொண்டு, வெள்ளம் புயல் காலங்களில் மட்டும் தங்கள் அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கூடுதல் நீரை வெளியேற்றும் குறும்பில் ஈடுபட்டு வருகிறது கர்நாடகம்.

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடைமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து கபினி அணைக்கு வினாடிக்கு 65,000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையிலிருந்து 60,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. 2 நாட்களில் கபினி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 65 அடியை எட்டும் என்பதால் காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஆடிப்பெருக்கு அன்று 51அடி இருந்த நிலையில், இன்று 54 அடி உள்ளது. கபினி அணை நிரம்பியுள்ள நிலையில், இந்த 54 அடி நீரின் அளவு மேட்டூர் அணையில் கொள்ளளவில் பாதிக்கும் குறைவே ஆகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,238.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.