Show all

தவறானமுயற்சி! தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்து விட்டோமேயென்று, விரலைத் துண்டித்துக் கொண்ட இளைஞர்

உத்தரப்பிரதேசத்தில் தான் வாக்களிக்க நினைத்த கட்சி இல்லாமல் பாஜகவிற்கு தவறுதலாக வாக்களித்ததால் இளைஞர் ஒருவர் தன் விரலைத் துண்டித்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதையொட்டி தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. 
உத்தரப்பிரதேசத்தில், சிக்கர்பூர் தொகுதி, அப்துல்லாபூர் கூலாசன் கிராமத்தைச் சேர்ந்த பவன் குமார் என்ற 25 அகவை இளைஞர், தான் நினைத்த கட்சி இல்லாமல் தவறுதலாக பாஜகவிற்கு மாற்றி வாக்களித்துள்ளார். அதற்குத் தண்டனை அளிக்கும் விதமாக அரிவாளால் தன் விரலைத் தானே துண்டித்துள்ளார். மேலும் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளி உ.பி மக்கள் நடுவே தீயாகியுள்ளது.
பெரிய தவறுதான்! அதற்காக உங்கள் விரலை வெட்டிக் கொண்டு அதை விட பெரிய தவறு செய்து விட்டதாகவே வருந்துகிறோம். குறைந்த பட்சம் தேர்தல் முடிவு வரும் வரை காத்திருந்திருந்தால், உறுதியாக உங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கியிருக்க வேண்டிய தேவை இல்லாமல் மக்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தீர்ப்பு வழங்கியிருப்பதில் மகிழ்ந்திருப்பீர்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,127.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.