Show all

உத்தவ் தாக்கரே அரசு வெற்றி! மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைந்த நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றிபெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளனர். வியாழக்கிழமையன்று உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். 

இன்று நடைபெறும் சட்டமன்றச் சிறப்புக்கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நானா படோல் பேரவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 

இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 169 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றிபெற்றது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.