Show all

ஜார்கண்டில் பாஜக தோல்விக்கு என்ன காரணம்! சிவசேனாவின் விளக்கம்

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. பா.ஜனதா தோல்வியை தழுவியது. காரணத்தை அலசும் சிவசேனா.

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவின் ஜார்கண்ட் தோல்வி குறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ இதழான சாம்னா தலையங்கத்தில் மக்களை அலட்சியப்படுத்தியதால்; பாஜக தோல்வியைத் தழுவியதாக கருத்து தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு தெரிவித்திருப்பதாவது:

மக்கள் ஆட்சியை மாற்ற வேண்டும் என நினைத்துவிட்டால் அவர்கள் பணத்திற்கும், அதிகார அழுத்தத்திற்கும் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிவுகள் மூலம் சுயபரிசோதனை செய்து கொள்ளும் மனநிலையில் பாஜக இல்லை. நீங்கள் மக்களை அலட்சியப்படுத்தும் போது, இதைவிட வேறு என்ன நடக்க முடியும்.

குடியுரிமை சட்டம் மூலம் ஹிந்துகளின் ஓட்டு விழுக்காடு அதிகரிக்கும் என அமித்சா நினைத்தார். ஆனால் ஜார்கண்ட் தொழிலாளர்களும், பழங்குடியினரும் பாஜகவை புறக்கணித்து உள்ளனர். கடந்த ஆண்டு நாட்டில் 75 விழுக்காடு மாநிலங்கள் பாஜக வசம் இருந்தன. தற்போது 30 முதல் 35 விழுக்காடு மாநிலங்கள் மட்டுமே பாஜகவிடம் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,378.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.