Show all

மோடி அரசு புதியதொடக்கம் கடன் திட்டத்தில், கடன் தள்ளுபடி! ஆனால் நிபந்தனைகளை நிறைவு செய்ய யாராவது தேறுவார்களா? கேள்விக்குறியே.

புதிய தொடக்கம் கடன் திட்டம் பீற்றிக் கொள்ளப்படும். ஆனால் நிபந்தனைகளை நிறைவு செய்து கடன் தள்ளுபடி பெற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்டு வருமானம் 60,000 என்றால் மாத வருமானம் 5000. இந்தப் பட்டியலில் தெருவாசிகள்தான் வருவார்கள். அவர்களுக்கு எந்த வங்கி கடன் கொடுத்திருக்கப் போகிறது? மோடி அரசு அவர்களுக்குத் தள்ளுபடி கொடுக்கப் போகிறது? 

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாட்டின் பொருளாதாரமும், பொருளாதார வளர்ச்சியும் பெரிய அளவிலான வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியை சரி செய்யும் முகமாக கடன் தள்ளுபடியைக் கையிலெடுக்கும் புதிய முடிவுக்கு வந்திருக்கிறது மோடியின் நடுவண் அரசு. ஆனாலும் நிறைவு செய்ய முடியாத நிபந்தனைகளை முன் வைத்திருக்கிறது. 

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்களிடம் இருந்து இரும்பு கரம் கொண்டு கடனை வசூலிக்கத் திட்டமிட்டு ஐபிசி வரை முறை கொண்டு வரப்பட்டது.

இந்த வரைமுறை கீழ் தற்போது பல நிறுவனங்களின் கடன்களைத் தீர்க்க நடுவண் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐபிசி திட்ட வரைவின் கீழ் குறைந்த அளவில் கடன் பெற்றவர்களின் கடனை தள்ளுபடி செய்ய நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஐபிசி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் இந்தக் கடன் தள்ளுபடி பல ஆயிரம் நிறுவனங்களுக்குப் புதிய தொடக்கமாக இருக்கும் என நினைத்து திட்டமிடப்படுகிறது.

கார்ப்பரேட் விவகார துறை செயலாளர் இன்ஜீத் சிறிநிவாஸ் இதைப்பற்றி குறுங்கடன் துறையினரிடம் ஆலோசனை செய்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் பெற்றுள்ள சிறு கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய என்ன வரையறை வைக்க வேண்டும்? அது யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்? போன்ற பல முதன்மையான விசயங்களை ஆலோசனை செய்துள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் இந்தச் சலுகை இந்தியா முழுவதிலும் அமலாக்கம் செய்யப்படும் என்றும், இந்தக் கடன் தள்ளுபடி சலுகையை ஒரு முறை பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். இத்திட்டம் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக இன்ஜீத் சிறிநிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அளிக்கப்படும் சலுகை 4 ஆண்டுகளுக்கும் சேர்ந்து 10000 கோடி ரூபாய் மேல் தாண்டாது என்றும், இது குறுங்கடன் துறையின் வலிமை மற்றும் வளர்ச்சியை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் திட்டமிடப்பட உள்ளதாக இன்ஜீத் சிறிநிவாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐபிசி விதிகளின் படி 'புதிய தொடக்கம்' என்கிற கடன் தள்ளுபடி சலுகையைப் பெற ஒருவரது ஆண்டு வருமானத்தின் அளவு 60,000 ரூபாயை தாண்டக் கூடாது. இதேபோல் தொழில்களுக்காகக் கடன் வாங்கியவர்களின் மொத்த வர்த்தகம் சார்ந்த சொத்து மதிப்பு 20,000 (அதாவது இயந்திரம் போன்ற வர்த்தகம் சார்ந்த உபகரணங்களின் மதிப்பு) ரூபாயைத் தாண்டக் கூடாது. இதேபோல் கடன் அளவு 35,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. இவை அனைத்து விதிகளையும் ஈடு செய்தால் மட்டுமே கடன் தள்ளுபடி பெற முடியும்.

அப்படியானல் 'புதிய தொடக்கம்' கடன் திட்டம் பீற்றிக் கொள்ளப்படும். ஆனால் நிபந்தனைகளை நிறைவு செய்து கடன் தள்ளுபடி பெற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்டு வருமானம் 60,000 என்றால் மாத வருமானம் 5000 இந்தப் பட்டியலில் தெருவாசிகள்தான் வருவார்கள். அவர்களுக்கு எந்த வங்கி கடன் கொடுத்திருக்கப் போகிறது? மோடி அரசு அவர்களுக்குத் தள்ளுபடி கொடுக்கப் போகிறது? 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,248.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.