Show all

கையைக் கிழித்துக் கொண்டாராம் சமாளிக்க முடியாத உச்ச கட்டத்தில் மதுமிதா! மதுமிதா உணர்வுப்பேச்சு சர்ச்சையாக்கப் பட்டதால்

வருணபகவான் கூட கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், அதனால்தான் தமிழ்நாட்டில் மழை இல்லை என்கிற மதுமிதாவின் உணர்வு முழக்கம், செரின், செரினுக்கு ஆதரவாக, கஸ்தூரி, சேரன் தவிர்த்த அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களால் சர்ச்சையாக்கப் பட்டதால், உச்ச பட்சத்தில் சமாளிக்க முடியாத மதுமிதா கையைக் கிழித்துக் கொண்டாராம். 

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஹலோ செயலி போட்டியில் அனைவரும் ஒரு முழக்கம் சொல்ல வேண்டும். அந்தப் போட்டியில் மதுமிதாவிற்கும் செரின் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வருணபகவான் கூட கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், அதனால்தான் தமிழ்நாட்டில் மழை இல்லை என்ற முழக்கத்தை மதுமிதா முன்வைத்திருக்கிறார். 

செரின் பிறந்து வளர்ந்தது எல்லாமே கர்நாடகா தான் ஆகையால் அவர் மதுமிதாவின் முழக்கத்தை பெரிய சர்ச்சையாக மாற்றியுள்ளார்.

சேரன், கஸ்தூரி தவிர்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் செரின் ஆதரவாளர்களாக நின்று, மதுமிதா தலைவர் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்று திரும்பத் திரும்ப கத்திக் கூச்சலிட்டனராம். சேரன், கஸ்தூரி தவிர்த்து, போட்டியாளர்கள் அனைவரும் மதுமிதாவை எதிர்த்து பிக்பாஸ் வீட்டினுள் போராடி, மதுமிதாவிற்கு மிகுந்த மன அழுத்தம் கொடுத்துள்ளார்கள். அதை சமாளிக்க முடியாமல் மதுமிதா கையை கத்தியால் வெட்டிக் கொள்கிறார்.

பிக்பாஸ் குழுவினர் இரு மாநிலத்திற்கு இடையே இதுபோன்ற சர்ச்சையான கருத்துக்களின் மூலம் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதால் அதனை ஒளிபரப்பவில்லையாம். தமிழ் பெண், தமிழ் பெண் என்று கூறுவதால் மட்டும் நீங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது என்று செரின் மதுமிதாவிடம் சண்டையிட்டு உள்ளார்.

இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு தானாகவே வெளியேறுகிறார் மதுமிதா. இந்த அளவிற்கு மன அழுத்தம் கொடுக்கப்பட்டது செரின் மட்டும் காரணம் இல்லை, சேரன், கஸ்தூரி தவிர்த்து அனைத்து போட்டியாளர்களும் தாம்.

விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் உலக அளவில் இருப்பதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களுக்கு இடையே எந்த ஒரு சலனமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கமுக்கமாக விஜய் தொலைக்காட்சி மதுமிதாவின் வெளியேறும் விருப்பத்திற்கு ஒத்துழைத்ததாகக் கூறப்படுகிறது.

மதுமிதா வெளியில் வந்ததும் புரிந்துகொண்டிருப்பார் வருணபகவான் கர்நாடாகக்காரர் இல்லை என்பதை. இயற்கையின் அறங்கூற்றுத் தீர்ப்பால், மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. ஒட்டுமொத்த சென்னை குளிர்ந்திருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,248.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.