Show all

ஒற்றை முழக்கத்தால் கதைத்தலைவர் ஆக்கப்பட்ட ஜம்யாங் செரிங் நம்கி! இரண்டே கிழமையில் மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார்

காஷ்மீரில் லடாக்கைப் பற்றி தனக்கு எல்லாமே தெரியும் என்று பாராளுமன்றத்தில் பீற்றிக்கொண்டு பெருமை கொண்ட லடாக்கை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர், அவரால் கூறப்பட்ட ஒரு கருத்தால், பாஜகவினரிடம் மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார். 

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநாவில் விவாதிக்கப்பட்டது குறித்து லடாக்கை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியது, அவருக்கு காஷ்மீர் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதாக பாஜகவினரால் மொக்கை வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு கிழமைகள் முன்பு மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக நடுவண் அரசு அறிவித்தது. இது தொடர்பான விவாதம் மக்களவையில் நடந்தது. அதில் லடாக்கை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியது பாஜகவினரால் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. 

அதன் பொருட்டு ஒரே நாளில் மக்கள் நடுவே இவர் பிரபலபடுத்தப் பட்டார். ஜம்யாங் செரிங் தனது பேச்சில், லடாக் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். நான் லடாக்கில் பிறந்து, அங்கே வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். எனக்குத்தான் லடாக்கில் என்ன நடந்தது என்று தெரியும். மற்ற இந்திய மாநிலங்களில் போல எங்களின் லடாக் முன்னேற்றம் அடையவில்லை. இத்தனை ஆண்டுகள் 370 சட்டம் வழங்கிய தகுதிகளால், காஷ்மீர் முன்னேறாமல் இருந்தது. காஷ்மீருக்கு எதிராக காங்கிரஸ் மிக மோசமாக செயல்பட்டு வந்தது. தற்போது பாஜக ஆட்சி மூலம் தொல்லைகளுக்கு எல்லாம் முடிவு வந்து இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு காரணமாக பாஜக கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் அவர் மிகவும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். 

இந்த நிலையில்தான் ஐநாவின் பாதுகாப்பு குழுவில், காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. மொத்தம் 15 நாடுகள் சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதம் செய்தனர். இது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்னையை ஐநா வரை சீனா கொண்டு சென்றது எதிர்காலத்தில் நமக்கு சிக்கலாக வாய்ப்புள்ளது. 

ஆனால் இது தெரியாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் இதில் மாறுபட்ட கருத்து ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநாவில் விவாதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை ஜநாவரை சென்றுள்ளது. அங்கு இது விவாதிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, காஷ்மீர் பிரச்சனையை அவர்கள் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்கவில்லை. ஆனால் பாஜகவின் நடவடிகையால் இந்த பிரச்சனை ஐநாவிற்கு சென்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து பாஜகவினர் நடுவே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இவரை தலைவர் போல பாஜகவினர் கடந்த சில நாட்களாக சித்தரித்து வந்தனர். ஆனால் ஜம்யாங் செரிங் ஒரே பேட்டியில் காஷ்மீர் குறித்து தவறாக கருத்து தெரிவித்துள்ளார். ஜம்யாங் செரிங் என்ன காஷ்மீர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாதது போல பேசுகிறார் என்று பலர் விமர்சனம் வைத்துள்ளனர். அவரின் இந்த பேட்டி பாஜக தொண்டர்களை கோவத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கி உள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,248.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.