Show all

ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி சிறப்புஊதியமாக தரும் குஜராத் வைர வியாபாரி

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி தனது ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி சிறப்பு ஊதியமாக வழங்குகிறார். ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை செய்து வருவதாக வியாபாரி சாவ்ஜி டோலாகியா கூறியுள்ளார். குஜராத் மாநில சூரத் நகரில் ஸ்ரீ ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் தொழிலதிபரும் வைர வியாபாரியுமான சாவ்ஜி டோலாகியா. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போதும் தனது வைர வியாபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு வீடு, கார், வங்கியில் வைப்புத்தொகை, வைர நகைகள் உள்ளிட்டவற்றை சிறப்பு ஊதியமாக அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இவருடைய நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 600 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கார்களை வழங்க முடிவு செய்துள்ளார் சாவ்ஜி. மாருதி சுசுகி மற்றும் சாலினோ வகை கார்களை ஊழியர்களுக்கு பரிசளிப்பதற்காக இவர் வாங்கியுள்ளார். 

வைரநகைகளை பிரிப்பது, செதுக்குவது உள்ளிட்ட பணிகளை கற்று அவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாலேயே எங்கள் நிறுவனம் லாபம் பெற முடிகிறது. எனவே ஊழியர்களை ஊக்கப்படுத்துவது கட்டாயம் என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தேவைகளைப் நிறைவு செய்யும் பரிசுகளை சிறப்பு ஊதியமாக வழங்கி வருவதாக சாவ்ஜி டோலாகியா கூறியுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.