Show all

பாடகர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த மியூசிக் அகெடமி! பெருந்தீயாய் பற்றியெரியும் 'எனக்குந்தான்' இயக்க புகாரின் பேரில்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'எனக்குந்தான்' இயக்க புகாரின் பேரில், கர்நாடக இசைப் பாடகர்கள் மீது மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது. சில சங்கீத வித்வான்கள் மீதும் பாடகர்கள் மீதும், 'எனக்குந்தான்' இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில், கர்நாடக சங்கீத கலைஞர்கள் ஏழுபேர் மீது மெட்ராஸ் மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது. 

என்.ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர்.ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் இனிமேல் மியூசிக் அகெடமியில் பாட முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளது. 'எனக்குந்தான்' இயக்க புகாரின் பேரில்; இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகெடமி தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.