Show all

தவறை தவறான நபர் தட்டிக் கேட்பதாலேயே சரிபோல அங்கீகாரம் பெற்று வருகிறது! தவறு- 370நீக்கம்; தவறான நபர்- பாகிஸ்தான்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கத்தை கண்டித்து, காஷ்மீருக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத பாகிஸ்தான் தொடர்ந்து போராடுவதால், தொடர்புடைய இந்திய மாநிலக் கட்சிகள் மற்றும் காஷ்மீர் மக்கள் அந்நியமாகி நிற்கிறார்கள். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கமோ சரிபோல படிப்படியாக அங்கீகாரம் பெற்று வருகிறது.

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக நடுவண் அரசு, காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் தொடர் அத்து மீறலை நிரந்தரமாக அப்புறப் படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையிலேயே, தம் சொந்த மக்கள் மீது நம்பிக்கையில்லாமல், காஷ்மீருக்கு இருக்கிற சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு ஆல் காஷ்மீர் மக்கள், பாகிஸ்தான் அத்துமீறலுக்கு ஒத்துழைப்பது போல தவறான கண்ணோட்டத்தில், எலிக்குப் பயந்து கூரையைக் கொளுத்துவது போல, காஷ்மீருக்கு 73 ஆண்டுகளாக வழங்கப் பட்டு வந்த சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு தகுதியை நீக்குகிறது. 

இதில் உரிமையுள்ள, தொடர்புடைய இந்திய மாநிலக் கட்சிகள் மற்றும் காஷ்மீர் மக்கள் அந்நியமாகி நிற்கிறார்கள். பாஜகவினால் தொடர் நெருக்கடியை சந்தித்து வருகிற அரவிந்த் கெஜ்ரிவால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு ஆதரவு நிலைபாடு எடுக்கிறார்.

ஆனால் காஷ்மீருக்கு எந்த நிலையிலும் தொடர்பே இல்லாத  பாகிஸ்தான்,  காஷ்மீர் சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு எதிராக அடுத்த நடவடிக்கையில் இறங்குவதாக தகவல்கள் வெளியாகின்றன.

பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாம். இந்தத் தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கம், பாஜக அரசு தமது மக்கள் மீது நம்பிக்கையில்லாமல் முன்னெடுத்த தவறு ஆகும். ஆனால் தொடர்பே இல்லாத பாகிஸ்தான் (தவறான நபர்) தட்டிக் கேட்பதாலேயே, காஷ்மீர் சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கம் சரிபோல அங்கீகாரம் பெற்று வருகிறது. இதில் தலையிட உரிமையுள்ள மாநிலக்கட்சிகளும், காஷ்மீர் மக்களும், பாஜக நடுவண் அரசு தங்களை பாகிஸ்தானோடு இணைத்துப் பேசிவிடுமோ என்ற அச்சத்தில் அந்நியமாக நிற்கின்றனர்.

உண்மையில், காஷ்மீர் சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்க விவகாரத்தை பாகிஸ்தான் முன்னெடுப்பது, பாஜக நடுவண் அரசுக்கான ஆதரவு நிலைப்பாடாகவே அமைந்துள்ளது. அதன் பொருட்டு, பாஜக நடுவண் அரசின் சொந்த மக்களின் மீதான தகுதி பறிப்புத் தவறு- தொடர் அங்கீகாரம் பெற்று வருகிறது. குறிப்பாக வட இந்தியக் கட்சிகள் (பாகிஸ்தானின் எதிர்ப்பால்), பாஜக நடுவண் அரசின் சொந்த மக்களின் மீதான தகுதி பறிப்புத் தவறை கண்டிப்பதற்கு அஞ்சி நடுங்குகின்றன. நேர்கொண்ட பார்வையுள்ள தமிழகம் மட்டுமே துணிந்து, பாஜக நடுவண் அரசின் சொந்த மக்களின் மீதான தகுதி பறிப்புத் தவறைக் கண்டித்துக் கொண்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,251.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.