Show all

யார் பலசாலி! செயலலிதாவா? நரேந்திரமோடியா?

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு சென்னை அமர்வு அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார்.

இவ்வழக்கின் முடிவில், சிறப்பு அறங்கூற்றுமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. ஆனால் தமிழக மக்களிடம் ஆதரவு பெற்று, இந்தியத் தலைமையை கைப்பற்றுவதுதாம் நிரந்தரத் தீர்வு என்று கருதி, நாற்பதும் நமதே என்று பாராளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனாலும் அவர் முயன்ற இந்தியத் தலைமையை, தனியாகவோ, கூட்டணியாகவோ கைப்பற்ற முடியமலே போனது. இறுதியாக மனஉளைச்சலில் செத்தும் போனார்.

குஜராத்தில் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த காலத்தில், மதக்கலவரத்தில் 1000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக அப்போது முதல்வராக இருந்த நரேந்திரமோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நரேந்திர மோடிக்கு தடை விதித்தன. 

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா செல்ல சுற்றுலா நுழைவிசைவு கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி மோடிக்கு நுழைவிசைவு தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது. 

மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார் மோடி. நியூஜெர்சியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள குஜராத் கலாச்சார மாநாட்டில் கலந்து கொள்ள சுற்றுலா நுழைவிசைவு கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று முன்பு எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காரணம் காட்டி மீண்டும் மோடிக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி பெலிஸ் கெயர் கூறுகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக நாங்கள் கருதவில்லை. என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களை பொய் என்று நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் சுற்றுலா நுழைவிசைவில் அமெரிக்க வர தகுதியானவர் என்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அவர் நிரூபிக்க வேண்டும் என்றார் கெயர். 

பாஜகவின் தலைமைஅமைச்சர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அரசு, மூன்று முறை நுழைவிசைவு வழங்க மறுத்துள்ள நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் நரேந்திர மோடி விடுவிக்கப்படாதவரை அவருக்கு நுழைவிசைவு தருவதில்லை என்ற கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க வெளியுறவு இணை மந்திரி ராபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார். 

குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, நரேந்திர மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி கலவர வழக்கில் இருந்து விடுவித்தது.

நரேந்திர மோடி தன்னை பாஜகவின் தலைமை அமைச்சர் வேட்பாளர் வரை முன்னேற்றி இந்தியத் தலைமை அமைச்சர் ஆனார். 

குஜராத் மாநில முதல்வராக 4 வது முறையாக நரேந்திரமோடி பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இதை தொடர்ந்து நரேந்திரமோடிக்கு விதிக்கப்பட்ட தடையை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விலக்கிக் கொண்டன. 

செயலலிதா தன்மீது உள்ள குற்றச்சாட்டை முறியடிக்க முடியாமல், செத்தே போனார். நரேந்திர மோடி தன் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட எல்லையில்லாமல் வளர்வதுதான் வழி என்று கண்டறிந்தார். சாம,பேத,தான,தண்ட முயற்சிகளில் வளர்ந்தார். மக்கள் வரிப்பணத்தில் நுழைவிசைவு மறுத்த நாடுகள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் படியாக, உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக சுற்றிவருகிறார் மோடி. தற்போது கூட சிங்கபூர் சுற்றுலாவில் உள்ளார். ஆம் ரஜினி நேற்று கூறியது போல நரேந்திர மோடி பலசாலிதான்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,971. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.