Show all

ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி! ரணில் விக்கிரமசிங்கேவே இலங்கையின் தலைமை அமைச்சர். சிறிசேனா?

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், தலைமை அமைச்சர் ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில், சிறிசேனா அடவடி  திருப்பத்தை ஏற்படுத்தினார். 
தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை தலைமை அமைச்சர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.
ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் சிறிசேனா அறிவித்தபடி நாடாளுமன்றம் இன்று கூட வேண்டும். 

இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்க வில்லை. இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நாளும் அறிவித்தார். 

ஆனால், உச்சஅறங்கூற்றுமன்றக் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

இதற்கிடையே நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அந்த நாட்டின் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்குகளை தொடுத்தனர். அந்த வழக்குகளில், தலைமை அறங்கூற்றுவர் நளின் பெரேரா தலைமையிலான அமர்வு முன் திங்கட் கிழமை விசாரணை நடந்தது.

இதன் முடிவில் நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து அறங்கூற்றுவர்கள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணையை இருபது நாட்களுக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற அவைத்தலைவர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். அதன் படி இன்று காலை நாடாளுமன்றம் கூடியது 

இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில்  ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

கூட்டம் தொடங்கியது இரண்டு கட்சி உறுப்பினர்களும்  மோதலில் ஈடுபட்டனர். இதனால்  அவையில்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு கருப்பு வில்லை  அணிந்து வந்து இருந்தனர்.

நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவந்த நிலையில் ராஜபக்சே அவையில் இருந்து வெளியேறினார்.  ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று உள்ளது. ராஜ பக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா அறிவித்து உள்ளார். மீண்டும் நாடாளுமன்றம்  நாளை காலை 10 மணிக்கு கூடும் என  பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா அறிவித்து உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,971. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.