Show all

அனுமதித்த அதிகாரிகளைத் தூக்குவது எப்போ! அகற்றுவது எத்தனை நாட்களில்? கட்டடங்களை யெல்லாம் தூக்கியாயிற்று- கழிவுகள் அகற்ற 70நாட்கள் ஆகுமாம்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மரட் நகராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்பா செரின் டவர்ஸ், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்ற வேண்டும் என்று உச்சஅறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவு அடுத்து, நேற்றுமுதல் இந்த கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கும் பணி தொடங்கியது.

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மரட் நகராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்பா செரின் டவர்ஸ், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்ற வேண்டும் என்று உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து நேற்றுமுதல் இந்த கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கும் பணி தொடங்கியது.

நேற்று முதற்கட்டமாக ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்பாசெரின் டவர்ஸ் ஆகியவை வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு மூன்றாவது கட்டடமான 16 அடுக்குமாடிகள் கொண்ட ஜெயின் கோரல்கேவ் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

இதையடுத்து மதியம் 2 மணியளவில் கோல்டன் காயலோரம் கட்டடமும் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இந்தக் கட்டடத்தையொட்டியுள்ள 45 வீடுகளில் உள்ள 200-க்கும் அதிகமான மக்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். கோல்டன் காயலோரம் கட்டடம் அருகே ஒரு பால்வாடி உள்ளது. பால்வாடிக்கும் அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மனைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் கட்டடம் தகர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டட இடிபாடுகள் நீர்நிலையில் விழாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் வெடிவைத்து தகர்க்கும் பணி நிறைவடைகிறது. உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என நாளையே உச்சஅறங்கூற்றுமன்றத்தில்  அறிக்கை சமர்ப்பிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டடஇடிப்புகள் மூலம் சுமார் 7,200 டன் கட்டடக் கழிவுகள் ஏற்படும் என்றும், இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த 70 நாள்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,395.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.