Show all

பரபரப்பு கிளப்பும் ஹிந்திப் படவுலக இயக்குநர் அனுராக் காஷ்யப்! மோடிதன் பிறப்புச்சான்றிதழை காட்ட வேண்டும். பட்டத்தைக் காட்ட வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிவரும் அனுராக் காஷ்யப்- தலைமைஅமைச்சர் மோடி தன்னைப் படித்தவர் என்று கூறுகிறார். தனக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் அரசியல் அறிவியல் பட்டம் படித்தாக கூறுகிறார். அந்தப்பட்டம் எங்கே இருக்கிறது. அவர் தன்னுடைய பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் அவரின் அப்பாவின் பிறப்பு சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அவரின் மொத்த குடும்பத்தின் பிறப்பு சான்றிதழையும் அவர் சமர்ப்பிக்க வேண்டும். என்று கேட்டு பரபரப்பு கிளப்பியுள்ளார்.

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலையின் போது, இந்தியாவோடு இருந்த பாகிஸ்தான், முகமதிய மதத்திற்கான நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து எடுத்துக் கொண்டு விட்டது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. மதச்சார்புடைய பாகிஸ்தானை விரும்பாத முகமதியர் பலர், மதச்சார்பற்ற இந்தியாவில் தங்கி, இந்திய விடுதலையிலிருந்து தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்திய அடையாளத்தின் (மதச்சார்பின்;மை) அடிப்படையில் அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்லுவதற்கு காரணம் இல்லை. அவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற அமைப்பாக படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியாவில் ஆளும் பொறுப்பை ஏற்றதுதான் பாஜக. 

மதவாத நாடாகப் பிரிந்த பாகிஸ்தான் உலகின் கடைசி இடத்திற்கு படிப்படியாக நகர்ந்து வருகிறது. அப்படியான பாகிஸ்தானை எடுத்துக்காட்டாக காட்டி, மதவாதசார்பின்மையாலேயே உலகின் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற இந்தியாவை மதச்சார்புக்கு முன்னெடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவை பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.

வாழத்தகுதியான நாடுகள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தொடர்ந்து இடம் பெற்று வருகிற நார்டிக் நாடுகளை தன்னுடைய முன்னோடியாக (ரோல்மாடலாக) கொள்ளாமல், வாழத்தகுதியற்ற நாடாக பட்டியலில் இடம் பெறுகிற பாகிஸ்தானை முன்னோடியாக எடுத்துக் கொண்டு, பாகிஸ்தான் எதிர்ப்பே பேச்சு, பாகிஸ்தான் எதிர்ப்பே உயிர் மூச்சு, பாகிஸ்தான் எதிர்ப்பே கொள்கை என்று பாஜக தொடர்ந்து இயங்கி வருவதால் இந்தியா படிப்படியாக தரம்தாழ்ந்து வருகிறது. பாஜக- பாகிஸ்தான், இந்தியாவில் தங்கி விட்ட முகமதியர்கள் என்பவைகளையே இலக்காக கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஹிந்துத்துவா நாடாக முன்னெடுக்க முயன்று வருகிறது. 

இதில் தமிழக மக்களை முன்னெடுப்பதில் பாஜகவிற்கு பெரும் சிக்கல் இருக்கிறது. தமிழக மக்களின் மொழி அடையாளத்தை அவர்களால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. அதனால், தமிழகத்தினர், பாஜகவினர் மட்டுமே ஹிந்துக்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் ஹிந்துக்கள், பாஜக ஆதரவு கட்சிகளில் இருப்பவர்கள் ஹிந்துக்கள், மற்றபடி மாற்றுக்கட்சியில் இருப்பவர்கள் ஹிந்துக்கள் அல்லர். அதுவும் இலங்கை தமிழர்கள் எந்த நிலையிலும் ஹிந்துக்களே அல்லர். என்று நிலைபாட்டை வைத்திருக்கிறது பாஜக. இந்த அடிப்படையில் தான் குடியரிமை சட்டத்தை முன்னெடுத்திருக்கிறது பாஜக. 

1.அதற்கு எதிராக நிற்கவேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள். 2.இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக முன்னெடுக்கிறவர்கள் அதற்கு எதிராக நிற்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். 
3.இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக நம்பி இந்தியாவில் தொடர்ந்து இருந்து விட்ட முகமதியர்கள் எதிர்க்கிறார்கள்.
4.பாஜக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிற, முகமதிய நாடுகளில் இருந்து வந்து, இந்தியாவில் தற்போது அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் ஹிந்துக்களாக அங்கீகரிக்கப்பட்டு குடியுரிமை பெறுகிறபோது, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று நினைக்கிற அந்த மண்ணின் மக்கள் எதிர்க்கிறார்கள். 

இந்த நிலையில்தான்- பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும், குறிப்பாக மோடி எந்த அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு தகுதியானவர்? என்று ஒரு கேள்வியை எழுப்பி, பரபரப்;பைக் கிளப்பியிருக்கிறார் ஹிந்திபட இயக்குநர் அனுராக் காஷ்யப்! 

இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி தன்னுடைய பிறப்பு சான்றிதழ் மற்றும் தன்னுடைய அப்பாவின் பிறப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட வேண்டும் என்று ஹிந்திபடவுலக இயக்குனர் நடிகர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் மற்றும் மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வருகின்றன. இன்னொரு பக்கம் நாடு முழுக்க பல்வேறு பல்கலைகழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்திய அரசின் இந்த சட்ட திருத்ததை தொடக்கத்தில் இருந்து ஹிந்திபடவுலக இயக்குனர் அனுராக் காஷ்யப் எதிர்த்து வருகிறார். இந்த சட்டத்திற்கு எதிராக கீச்சுவிலும் களத்திலும் நேரடியாக அனுராக் காஷ்யப் போராடி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் நேருபல்கலைக்கழகம் சென்ற அனுராக் காஷ்யப், அங்கு போராடிவரும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். 

இந்த நிலையில் தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிவரும் அனுராக் காஷ்யப்- தலைமைஅமைச்சர் மோடி தன்னை படித்தவர் என்று கூறுகிறார். தனக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் அரசியல் அறிவியல் பட்டம் படித்தாக கூறுகிறார். அந்தப்பட்டம் எங்கே இருக்கிறது. அவர் தன்னுடைய பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் அவரின் அப்பாவின் பிறப்பு சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அவரின் மொத்த குடும்பத்தின் பிறப்பு சான்றிதழையும் அவர் சமர்ப்பிக்க வேண்டும். 

அப்படி செய்தால் மட்டும்தான் அவர் மக்களிடம் பிறப்பு சான்றிதழை கேட்க முடியும். அப்போது மட்டும்தான் மக்களிடம் குடியுரிமையை நிரூபிக்க கேட்கும் உரிமை மோடிக்கு இருக்கும். மோடி முதலில் அதை செய்யட்டும். இந்த குடியுரிமைச் சட்டம் முழுக்க முழுக்க முட்டாள் தனமானது. இந்திய ஒற்றுமைக்கு இது எதிரானது. இந்த அரசுக்கு பேச தெரியவில்லை. அதனால் மக்கள் பேசுவதை இந்த அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அவர்களால் ஒரு சிறிய கேள்வியை கூட எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு சரியான திட்டமில்லை. அதனால் அவர்கள் கேள்வி கேட்கும் மக்களை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,395.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.