Show all

இந்திய, மாநில அரசுகள்- தாய் மொழிக்கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்! துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு

விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய, துணைக் குடியரசு தலைவர் வெங்கயநாயுடு, தாய் மொழிக் கல்வி கட்டாயத்தேவை. குறைந்தது உயர்கல்வி வரை மட்டுமாவது, தாய்மொழியில் படிக்க வேண்டும். இந்திய, மாநில அரசுகள் தாய் மொழிக்கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை ராயபேட்டையில் அருள்திரு இராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில், துணைக் குடியரசு தலைவர் வெங்கயநாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணைக் குடியரசு தலைவர் வெங்கயநாயுடு, இந்தியாவில் பாரம்பரியமாகவே மதச்சார்பின்மை இருக்கிறது. அதற்கு பின் தான் அரசியல் அமைப்பு சட்டம் வந்தது.

தாய் மொழிக் கல்வி கட்டாயத்தேவை. குறைந்தது உயர்கல்வி வரை மட்டுமாவது, தாய்மொழியில் படிக்க வேண்டும். இந்திய, மாநில அரசுகள் தாய் மொழிக்கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,395.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.