Show all

தடையைத் தாண்டி சபரிமலைக்கு பயணம்! கேரள காவல்துறை பாதுகாப்புடன் தமிழக பெண் பக்தர்கள்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து அகவையுடைய  பெண்களும் செல்லலாம் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக பாஜக கட்டமைப்பு ஹிந்து அமைப்பினர் போராடி வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்தும் நிறுத்துகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பும் பெண்களை ஒருங்கிணைத்து 'மனிதி' என்ற அமைப்பு சபரிமலை கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தது, அதன்படி சென்னையை சேர்ந்த 11 பெண்கள் பம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை பாஜக சார்பு ஹிந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஐயப்ப பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

ஆனால் ஐயப்பனை தரிசனம் செய்யாமல் நாங்கள் திரும்ப மாட்டோம் என மனிதி அமைப்பை சேர்ந்த பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். முன்னதாக சபரிமலைக்கு வருவதையொட்டி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு மனிதி அமைப்பினர் கடிதம் எழுதியிருந்தனர். 

எனினும், சபரிமலைக்குள் பெண்கள் செல்ல போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர்களைக் கைது செய்த காவல்துறையினர், பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களை பாதுகாப்புடன் சபரிமலைக்கு கூட்டிச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,010.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.