Show all

பக்கோடா கடை வைக்க உதவி கோரிய இளைஞருக்கு, இந்திரா அரசைப் போல உதவுமா மோடிஅரசு

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தைப் போக்க பக்கோடா விற்பனையில் ஈடுபடலாம் என மோடி கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் பக்கோடா செய்து மோடிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதை எதிர்த்து பட்டதாரி இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் பக்கோடா விற்கும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஷ்வின் மிஷ்ரா என்ற இளைஞருக்கு, மோடியின் இந்தக் கருத்தில் நம்பிக்கை ஏற்பட்டவராக, இந்திராகாந்தி சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மானியத்துடன் எந்த பிணையும் இல்லாமல் கடன் வழங்கியதைப் போல, கருத்து சொன்ன மோடியும் செயல்படுவார் என்ற நம்பிக்கையில், நடுவண்; துகிலியல்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நான் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். தலைமை அமைச்சரின் அறிவுரையின்படி பக்கோடா கடை வைக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் அதற்கு வங்கிகள் கடன் தர மறுத்துள்ளன. இதற்கு நீங்கள் தான் நிதியுதவி செய்து உதவ வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

பக்கோடா கடை வைக்க உதவி கோரிய இளைஞருக்கு, இந்திரா அரசைப் போல உதவுமா மோடிஅரசு?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,700

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.