Show all

தீர்ப்பு அளித்தாஆலும்! மறுதேர்வு நடத்தும் நடுவண்அரசு கல்வி வாரிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளில் 10,12-ம் வகுப்புகளுக்கான கேள்வித்தாள் வெளியானதாகக் கூறி மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளதை எதிர்த்தும், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டுள்ளது.

சகார்பூர் பகுதியைச் சேர்ந்த ரீபக் கன்சால் என்ற மாணவர் சார்பில் இந்த மனு உச்ச பதிகை செய்யப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரிய தேர்வில் 16.38 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பில் 11.86 லட்சம் மாணவர்களும் எழுதினார்கள்.

ஆனால், கேள்வித்தாள் வெளியானதாக வந்த புகாரையடுத்து, முழுமையாக விசாரணை செய்து முடிக்காமல் மறுதேர்வு நடத்த நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானதாகும்.

தேர்வு தொடங்குவதற்கு சிலமணி நேரத்துக்கு முன் கேள்வித்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. ஆனால், கேள்வித்தாள் வெளியாகவில்லை, பெற்றோர்களும், மாணவர்களும் அச்சப்பட வேண்டாம் என்று நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் அப்போது அறிவித்தது. ஆனால், இப்போது மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

 

நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் மறுதேர்வு அறிவிப்பை ரத்து செய்வதோடு, ஏற்கெனவே நடந்த தேர்வுகளின்படியே முடிவுகளை அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரயம் என்பதால், உச்ச அறங்கூற்று மன்றம் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தாலும், முறைப்படுத்த வேண்டுமே என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மாணவர்களின் பொற்றோர்கள். நடுவண் அரசுதான் உச்ச அறங்கூற்று மன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லையே என்று காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்பை நடுவண் அரசு கிஞ்சித்தும் மதிக்காததை மேற்கோள் காட்டுகிறார்கள்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.