Show all

மலாலாவின் கனவு! பெண்கல்விக்கு எதிர்நிலைபாட்டிலிருந்து பாகிஸ்தான் மீள வேண்டும் என்பதேவாம்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமை குறித்து பேசிய காரணத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன் மலாலா என்கிற 15 அகவை சிறுமி தலிபான்களால் சுடப்பட்டார். தலை மற்றும் மண்டையோட்டில் குண்டுகள் பாய்ந்து  உயிருக்குப் போராடிய போதும், அறுவைசிகிச்சை மூலம் குணமடைந்தார். ஆனால், அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் லண்டனில் வசித்து வந்தார்.

மலாலா மேற்கத்திய கலாச்சாரத்தை பாகிஸ்தானில் பரப்ப முயன்றார். அதனால்தான் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்றோம் ஆனால் அவர் தப்பிவிட்டார் என்று தலிபான்கள் தெரிவித்தனர்.

தற்போது லண்டனில் தனது கல்வியை மேற்கொண்டு வரும் மலாலாவிற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. மேலும் இளைஞர்களுக்கான தூதராகாவும் உள்ளார். பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றுள்ளார். அங்கு இஸ்லாமாபாத் தலைமை அமைச்சர் அலுவலகத்தில் மக்களின் முன்பு உரையாற்றினார்.

அப்போது, என்னுடைய கனவு பாகிஸ்தான் வரவேண்டும் என்பதுதான். அது தற்சமயம் நிறைவேறிவிட்டது. நான் சுடப்பட்டபோது இனிமேல் இங்கு வாழ முடியாதோ என்று பயந்தேன். ஆனால், தற்போது உயிருடன் இங்கு எனது நாட்டில் இருக்கிறேன். பாகிஸ்தானின் தெருக்களில் எந்த வித அச்சமின்றி மக்களோடு உரையாட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை என்று அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.