Show all

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு! டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, இது வரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் தலைமைஅமைச்சராக மோடி பதவியேற்கும் போது, ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 60.51 ஆகும். இன்று காலை ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 72 ஆனது.

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் தலைமைஅமைச்சராக மோடி பதவியேற்கும் போது, ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 60.51 ஆகும். நாம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக தரும் இந்திய ரூபாய் 61, 62 என்று அதிகமானால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது என்று பொருள். அப்படி சரியும் போது நாம் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு நாம் செலுத்த வேண்டிய தொகை கூடுதல் ஆகிக் கொண்டே செல்லும். இந்திய நாட்டிற்கு இது தேவையில்லாத இழப்பு ஆகும். அன்னிய முதலீடுகள் இந்தியாவில் குறையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு இப்படி சரியும்.

இந்தியப் பங்கு சந்தைகளின் வர்த்தக கடைசி நாளான இன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இன்று காலை 72 ரூபாய்க்கும் மேல் வரை சென்று வர்த்தகமாகியது.

இதிலிருந்து- அதிகப்படியான அன்னிய முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது என்று புரிந்து கொள்ளலாம். 

பணமதிப்பிழப்பு, சரக்கு-சேவை வரி போன்ற பாஜக நடுவண் அரசின் பொருளாதார நடவடிக்கைகள் இந்தியாவின் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து குறைவதற்கு முதன்மையான  காரணம் என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

அதற்கு மேலும்:- அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரால், சீனாவின் யுவான் மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக, அந்த நாடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் டாலர் மதிப்பு அதற்கு எதிர்மாறாக ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் தற்போது முதலீட்டாளர்கள் கவனம் அமெரிக்காவின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் படி அமெரிக்கா சந்தைகளில் முதலீடு செய்வதற்காக, முதலீட்டாளர்கள் உலகம் முழுக்க இருக்கும் தங்களது முதலீடுகளை தற்போது வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் அதிகப்படியான அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியே, இன்று இந்தியா ரூபாயின் மதிப்பு காலை 72 ரூபாய்க்கும் மேல் சென்றுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மாத வீழ்ச்சி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பங்குச் சந்தை தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் அமெரிக்கா சீனா பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் இந்த நிலையில், இந்த இரு நாடுகளும் பின் வாங்குவதாக தெரியவில்லை. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது என்கிறார்.

மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கியின் தலைவர், அமெரிக்கா சீனா வர்த்தக போரால், உலக பொருளாதாராத்தில் மந்த நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நிச்சயம் அமெரிக்காவில் இன்னும் வட்டி குறைப்புகள் கண்டிப்பாக தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் வட்டிக் குறைப்புகள் இன்னும் அதிகமாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களின் கவனத்தை, அமெரிக்காவின் பக்கம் ஈர்ப்பதாகவே இருக்கிறது என்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.