Show all

செக்கு கால்பணம் செமக்கூலி முக்கால் பணம் என்ற கதையாம்! செல்லாத 500,1000 ரூபாய்தாள்கள் நிலை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பணமதிப்பிழப்பு மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி என்ன செய்து வருகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்ததால் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.50 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.

அதன்பின் புதிய ரூ.500, ரூ.2000 ரூபாய்;தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பழைய ரூபாய்;தாள்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன்படி ரிசர்வ் வங்கிக்கு ஏறக்குறைய 99 விழுக்காடு செல்லாத ரூபாய்;தாள்கள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்நிலையில், செல்லாத ரூ.500, ரூ.1000 ரூபாய்;தாள்களை ரிசர்வ் வங்கி என்ன செய்து வருகிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பிடிஐ செய்தி நிறுவனம் கோரி இருந்தது. அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

செல்லாததாக அறிவிக்க ரூ.500, ரூ.1000 ரூபாய்;தாள்கள்; ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய்;தாள்கள்; வங்கிக்குள் வந்துவிட்டன. செல்லாத ரூபாய்;தாள்கள் 500, 1000 ரூபாய்கள் மிகவும் துல்லியமாக எண்ணப்படும் நவீன எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன. எண்ணி முடிக்கப்பட்ட ரூபாய்;தாள்கள்; நவீன எந்திரங்கள் மூலம் மிகச்சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, அதை செங்கல் போன்றவடிவத்தில் நசுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி பல்வேறு ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் நடந்து வருகிறது.

இந்தச் செல்லாத ரூபாய்;தாள்கள் எதையும் ரிசர்வ் வங்கி மறுசுழற்சி செய்யவில்லை. செல்லாத ரூபாய்;தாள்கள் எண்ணுவதற்காக மிகவும் உயரிய தொழில்நுட்பம் கொண்ட 59 எந்திரங்கள் பல்வேறு ரிசர்வ் வங்கிஅலுவலகங்களில் வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி போன்ற ஆட்கள் வந்து இது போன்ற வேலைகளைச் செய்து நாட்டின் பொருளாதாரத்தை வீணடிப்பார்கள் என்று நம்தமிழ் முன்னோர்களுக்கு முன்னமேயே தெரிந்திருக்;கும் போல- இவர்களுக்காகத்தான் இந்த ‘செக்கு கால்பணம் செமக்கூலி முக்கால் பணம் என்ற கதையாம்’ என்கிற பழமொழி போலும்.

செக்கை எளிமையாக யாரும் உருட்டிக் கொண்டே சென்று விட முடியும்; அதை கூலி கொடுத்து சுமந்து எடுத்துச் செல்ல யாரும் முனைய மாட்டார்கள் என்பதுதான் இந்தக் கதையின் உட்கருத்து. ஆனால் அந்த வேலையைச் செய்கிற மோடியை நாம் நமது தலைமை அமைச்சராக அமர்த்திக் கொண்டு அல்லல் படுகிறோம் என்றால் இந்திய மக்கள் எவ்வளவு அடிமுட்டாள்கள் பாருங்கள் என்று நம் தமிழ் முன்னோர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். 

நல்லவேளை தமிழகத்தில், பன்னீர் எடப்பாடியைத் தவிர அந்த அளவிற்கு யாரும் இல்லையென்பது நமக்கு பெருமைதாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,730.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.