Show all

ராகுல்காந்தியின் இரண்டாவது அதிரடி! அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்களை நிர்பந்திக்கும் பாஜக

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்கப்பூர் மாணவர்கள் கேள்விக்கு ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகத் தெரிவித்து பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த ராகுல்காந்தி, இப்பொழுது அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்களை நிர்பந்திக்கும் பாஜக என்று கூறி பாஜகவை ஆட்டம் காண வைத்திருக்கிறார். 

நேற்று திராவிட நாடு கேட்கிறாரா ஸ்டாலின?; என்று ஊடகங்கள் பட்டி மன்றம் நடத்தியதால் அதிர்ந்து போன ஸ்டாலின், ராகுல் காந்தியின் இந்த இரண்டாது அதிரடியால் உற்சாகமாகியிருக்கிறார்.

ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்றதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. இன்று நிறைவு நாளின்போது ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சென்று இளைஞர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். அங்கிருந்து வரும் பதில் ஒன்றும் செய்யவில்லை என்பதுதான். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ளபோதிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்குண்டு என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

பாஜக கட்சி ஒரு அமைப்பின் குரல், காங்கிரஸ் நாட்டின் குரல் ஆகும். மக்களின் சேவகனாக செயல்படுகிறது காங்கிரஸ். அதனால் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் கேள்வி கேட்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.

வங்கியில் மக்களின் பணத்தை கொள்ளையடிப்போரை மோடி அரசு பாதுகாக்கிறது. செல்வந்தர்களின் காப்பாளராக செயல்படுகிறது பாஜக.

முதன்மைப் பிரச்சினைகள் அனைத்திலும் தலைமை அமைச்சர் மௌனம் காக்கிறார். காங்கிரஸ் கட்சி உண்மையை பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. பழங்குயினரின் வனம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

தமிழ் மக்கள் மீது மாற்று மொழியை திணிக்கின்றனர். ஊழலும் அதிகாரமும்தான் நாட்டை ஆண்டு வருகிறது. என்றார் ராகுல் காந்தி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,730.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.