Show all

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க ஆளும் பாஜகவுக்கு வக்கில்லைதானே! அகிலேஷ் யாதவ்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சியான பாஜகவுக்கு, சொல்லிக் கொள்ள சாதனைகள் இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளை குறைகூறி கருத்துப்பரப்புதல் மேற்கொண்டு வருவதை தனது கீச்சுப்பக்கதில் சாடியுள்ளார் அகிலேஷ் யாதவ்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் கருத்துப்பரப்புதல்கள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் கருத்துப் பரப்புதல் யுக்தியை அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து தனது கீச்சுவில் கருத்து கூறியுள்ள  அகிலேஷ் யாதவ், பாஜகவின் கருத்துப்பரப்புதல் கூட்டங்களில் எதிர்க்கட்சியினரை குறைகூறுவதை மட்டுமே ஏன் கருத்துப்பரப்புதலாகக் கொண்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் சாதித்ததாக கூற அவர்களிடம் எதுவும் இல்லையல்லவா? மக்களின் கோபத்தையும், தோல்வியையும் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கருத்;துப்பரப்புதலைத் தவிர்க்க வெயில் கடுமையாக இருக்கிறது என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.