Show all

தேர்தல் காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கும் தகவல்! எச்.இராஜா உள்ளிட்ட சில பிரபலங்களின் சொத்து மதிப்பு

செயலலிதாவுக்கு மட்டுமே தமிழகத்தில் சொத்து இருந்ததைப் போல, அவர் மட்டுமே வாதம் வம்பு வழக்கு என்று சந்தித்து வந்த நிலை உலகறிந்த செய்தி. அதனுடன் ஒப்பிடும் போது ஒன்றும் குறைச்சல் இல்லாத வகையில்- நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பு மனு பதிகை செய்த சில பிரபலங்களின் சொத்து விவரங்கள் நம்மை மூக்கின் மீது விரல் வைக்க வைக்கிறது. அதுவும் அவர்களாக கணக்கு காட்டும் விவரம். தோண்டி துருவினால்?

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு பதிகை செய்துள்ள வேட்பாளர்கள் தமிழிசை, எச்.ராஜா, கார்த்தி, கனிமொழி, தங்களது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

தூத்துக்குடி, பாஜக வேட்பாளர், தமிழிசை சவுந்தரராஜன், நேற்று வேட்பு மனு பதிகை செய்தார். அவர் தனது சொத்து விவரமாக: கையிருப்பு- 50 ஆயிரம் ரூபாய், வங்கி சேமிப்பு- வைப்;பு, கார், நகை உட்பட மொத்தம், 1.05 கோடி ரூபாய், கணவர் சவுந்தரராஜன் பெயரில், வங்கி சேமிப்பு மற்றும் வைப்பு, 2.12 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்து உள்ளார். தன் பெயரில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலமும், கணவர் பெயரில், 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், உள்ளிட்ட அசையா சொத்துகள் இருப்பதாக, தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை தொகுதி, பாஜக வேட்பாளர், எச்.ராஜா, வேட்புமனுவுடன் அவர் பதிகை செய்துள்ள சொத்து மதிப்பு: கையிருப்பு- 75 ஆயிரம் ரூபாய், 2.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 சவரன் நகைகள் உட்பட, அசையும் சொத்துக்கள் மதிப்பு- 51 லட்சம் ரூபாய். அசையா சொத்துகள் மதிப்பு- 78 லட்சம் ரூபாய். மனைவி பெயரில் வங்கி இருப்பு- 50 ஆயிரம் ரூபாய், 14.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 60 சவரன் நகைகள் உட்பட, 19 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துகள் உள்ளன. 94 லட்சம் ரூபாய்க்கு, அசையா சொத்துகள் உள்ளன. கூட்டு குடும்ப கணக்கில், வங்கி இருப்பு- 17 ஆயிரம் ரூபாய் உட்பட, அசையும் சொத்துகள், 1.57 கோடி ரூபாய்க்கு உள்ளது. அசையா சொத்துகள் மதிப்பு- 4 லட்சம் ரூபாய். மொத்தம், 3.52 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. கடன், 59 லட்சம் ரூபாய் உள்ளது.  வழக்குகள்: திருமயத்தில் விநாயகர் ஊர்வலத்தில் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்ததாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காரைக்குடி, சிவகங்கையில் ஊர்வலமாகசென்றதாகவும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி, பெயரில் வங்கி கையிருப்பு ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 619.ரூ.1.22 லட்சம் மதிப்பிலான 40 கிராம் நகை, ரூ.90 ஆயிரம் மதிப்பில் 3 கேரட் வைரம். அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ. 24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 168.அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.22 கோடியே 88 லட்சத்து 89 ஆயிரத்து 303. வழக்குகள்: இவர் மீது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு பாட்டியாலா அறங்கூற்றுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது தவிர அமலாக்கத்துறைசார்பில் போடப்பட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மனைவி பெயரில்: வங்கி கையிருப்பு ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து106ரூ.52 லட்சத்து 81 ஆயிரத்து 614 மதிப்பில் 1,727 கிராம் தங்கம்.ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்து 20 மதிப்பில் 40.728 கேரட் வைரம்.ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 561 மதிப்பில் 28.721 கிலோ வெள்ளி.அசையும் சொத்துக்கள் ரூ. 9 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 140.அசையா சொத்துக்கள் ரூ. 22 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 413. 

இளங்கோவன், மனைவி, கூட்டு குடும்பத்தினரிடம், 27 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளது. டொயோட்டா கார், தங்கம், வெள்ளி நகை ஆகியவற்றின் மொத்தமதிப்பாக, 2.33 கோடி ரூபாய், மனைவி பெயரில் நகை, 39.50 லட்சம் ரூபாய். வங்கி வைப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில், 36.77 லட்சம் ரூபாய். வேட்பாளர் சுயமாக வாங்கிய சொத்து மதிப்பு, 3.24 கோடி, மனைவி பெயரில், 3.82 கோடி, கூட்டு குடும்ப சொத்து மதிப்பு, 60 லட்சம், பூர்வீக சொத்து மதிப்பு, 10 கோடி ரூபாய் என, மொத்தம், 21 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன.

கன்னியாகுமரி தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சொத்து மதிப்பு:

கையிருப்பு, வங்கி இருப்பு- 230 கோடியே, 20 லட்சத்து, 95 ஆயிரத்து, 302 ரூபாய். அசையா சொத்து: 181 கோடியே, 95 லட்சம். மனைவி பெயரில் அசையும் சொத்து: 28.35 லட்சம், அசையா சொத்து: 4.75 கோடி ரூபாய். வங்கி கடன்: 154.75 கோடி ரூபாய்.

திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர், திருநாவுக்கரசர், சொத்து பட்டியல்: கையிருப்பு ரொக்கம், 33 ஆயிரம், வங்கியில் சேமிப்பாக, 42 ஆயிரம் ரூபாய், 120 கிராம் தங்க நகை. 4.38 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள்; 27.14 லட்சம் ரூபாய் மதிப்பில், அசையா சொத்துகள். கடனாக, 40 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி ஜெயந்தியிடம், 26 ஆயிரம் ரூபாயும், வங்கி சேமிப்பாக, 36 ஆயிரம் ரூபாய், 400 கிராம் நகை. மனைவி பெயரில், 2.08 கோடி ரூபாய் மதிப்பில், அசையும் சொத்துகளும், வேளாண் நிலம், வணிக கட்டடம், குடியிருப்பு கட்டடம் என, 81.56 லட்சம் ரூபாய் அசையாக சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், தி.மு.க., வேட்பாளராக, கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார். தனக்கு, 30 கோடி ரூபாய் மதிப்பில், சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து விபரம்: 1 கோடியே, 40 லட்சத்து, 29 ஆயிரத்து, 910 ரூபாய். 794 கிராம் தங்கம், 13 கிராம் வைரம், ரொக்கம் சேர்த்து, அசையும் சொத்துகளின் மதிப்பாக, 21 கோடியே, 16 லட்சத்து, 57 ஆயிரத்து, 370 ரூபாய். அசையா சொத்துகளின் மதிப்பு, 8 கோடியே, 92 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய். வங்கி கடனாக, 1 கோடியே, 92 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய். தன்னுடையது, 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.