Show all

ஹிந்தி பேசும் மக்கள், வேலையும் தொழிலும் இழந்து தெருவில் அலையும் காலம் வந்து கொண்டிருக்கிறது!

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகம் முழுவதும் தாங்கள் ஆண்டு வரும் நாடுகளை வெள்ளையர்கள், ஒவ்வொன்றாக விடுவித்து வரும் நிலையில், இனி இந்தியா விடுதலை பெறுவது உறுதி என்று தெரிந்து கொண்ட காங்கிரஸ்காரர்கள்: வெள்ளையர்கள் இந்தியாவிற்கு விடுதலை தருவதற்கு முன்பே வெள்ளையர்கள் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ்காரர்கள், அதிகார மொழி ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தி என்று முடிவு செய்து விட்டார்கள். 

இந்தியா விடுதலை பெற்ற பிறகு. இந்திய அரசிலமைப்புச் சட்டத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக இருக்கும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி மட்டுமேதான் இந்தியாவின் அலுவல் மொழியாக அதிகாரம் செலுத்தும் என்று எழுதி விட்டார்கள். அதற்குள்ளாக ஹிந்தியை அதிகார மொழியாக்காவிட்டால் மேலும் சில காலம் ஆங்கிலம் நீட்டிக்கப் படும் என்றும் எழுதி விட்டார்கள்.

அப்படி எழுதி விட்டு, இந்தியா முழுவதும் அவர்கள் ஆட்சி காலம் தொடங்கி அவர்கள் ஆட்சியை இழக்கும் வரை, காங்கிரஸ் கட்சியின் ஒரே சாதனையாக ஹிந்தியை ஒரு பாட மொழியாக ஆக்கி விட்டார்கள். 

தமிழகத்தில் அவர்கள் பப்பு வேகாதா நிலையில், தமிழக மக்களின் தொடர் போராட்டத்தினால் தமிழ் உள்ள 20 இந்திய மொழிகளுடன் உருதும் ஆங்கிலமும் என 22 பட்டியல் மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கப் பட்டு விட்டன. 

பெருங்காய டப்பாவில் பெருங்காயம் தீர்ந்து விட்ட போதும் கூட பெருங்காய வாசனை இருப்பது போல ஹிந்தி இந்தியாவில் வேலை வாய்ப்பில் ஒட்டிக் கொண்டு விட்ட ஹிந்தி மொழி பேசும் மக்களில் இருந்து வந்த அதிகாரிகளால் ஹிந்தி இருந்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சிகாரர்களை அடுத்து வந்த மோடி, வடஇந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும், சரக்கு-சேவைவரி, ரூபாய்தாள் மதிப்பிழப்பு, எண்ணிம இந்தியா என்றெல்லாம் கதை பண்ணி குறிப்பிட்ட ஒரு பத்து கார்ப்பரேட்டுகளிடம் பிடுங்கி கொடுத்து விட்டார்.

தற்போது குறிப்பாக தமிழகம், மற்றும் தென்னிந்தியப் பொருளாதாரத்தில் தாம் இந்தியா இயங்கிக் கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் தொழிலும் வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக படிக்காதவர்களுக்கு வடஇந்தியாவில் பிழைக்க வழியேயில்;;;;;லை. நிறைய வடஇந்திய படிப்பில்லாத இளைஞர்களின் வாழ்க்கை தென்னிந்திய கட்டுமானப் பணிகளை நம்பியேயிருக்கிறது. 

காங்கிரஸ் ஆட்சி எப்போதோ முடிக்கப் பட்டு விட்ட நிலையில், தற்போது பாஜகவின் கதையும் முடியவிருக்கிற நிலையில் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின் கையில் இந்தியாவின் ஆட்சி இந்த ஆண்டிலேயே அமையவிருக்கிறது. 

ஹிந்தியை மட்டுமே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு ஆங்கிலமும் வராது. இந்தியாவின் வேறு மொழிகளையும் கற்க வில்லை. அதனால் ஹிந்தி பேசும் மக்கள் வேலையும் தொழிலும் இழந்து தெருவில் அலையும் காலம் வந்து கொண்டிருக்கிறது!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.