Show all

தற்போது கேரளத்தில் தீயாக 'போ மோனே மோடி'! தமிழ்மக்களால், 'மோடியே திரும்பிப்போ' உலக அளவில் தலைப்பாக்கப்பட்டு விட்ட நிலையில்

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா செல்லும் தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக 'போ மோனே மோடி' என்ற கீச்சுப் பதிவு தலைப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

நான்கு ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த முயற்சியும் எடுக்காமல், நான் அடிக்கல் நாட்டுவனாம். நீங்க ஓட்டு போடுவிங்களாம். நான் செயிச்சு வந்து அடுத்த முறை ஆட்சி முடியறத்துக்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவனாம் என்கிற தொணியில் மோடி தமிழகம் வந்தார். தற்போது இவர்; கேரளா சென்றுள்ளார். தமிழகம் வந்த மோடிக்கு எதிராக 'மோடியே திரும்பிப்போ' கீச்சுப் பதிவு முன்னெடுக்கப் பட்டு,  

தற்போது இதை உலக அளவில் தலைப்பாக்கி யுள்ளனர் தமிழ்மக்கள். 

மோடி தமிழகத்தில் நடந்த விழாவை முடித்துக்கொண்டு தற்போது கட்சியினர் மத்தியில் உரையாட கேரளா சென்று இருக்கிறார். 

தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு நிலவியது போலவே கேரளாவிலும் மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. கேரளாவில் மோடிக்கு எதிராக 'போ மோனே மோடி' என்ற பதிவு முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை போலவே அங்கும் இது தீயாகி உள்ளது. 

காலையில் இருந்து பலர் மோடிக்கு எதிராக இதில் கீச்சிட்டு வருகிறார்கள். கேரளா வெள்ளத்தின் போது போதிய அளவிற்கு நிவாரண நிதி அளிக்காத கோபத்தில் பாஜக மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அதேபோல் சபரிமலை பிரச்சனையைப் பெரிதாக்கிய கோபத்திலும் மக்கள் இருக்கிறார்கள். 

தற்போது கேரளாத்தில் 'போ மோனே மோடி' தலைப்பாகி வருவது பாஜகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்திலும், கேரளத்திலும் பாஜகவால் காலூன்ற முடியாது என்று ஒருவர் கருத்துப்படம் போட்டு இருக்கிறார் இந்த 'போ மோனே மோடி' தலைப்பாக்குதலில்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.