Show all

சம்பளம் போதாதவர்களை விடுவித்துவிடு! வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களாக வேலைகொடு: பெற்றோர், மாணவர்கள் மறியல்

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோட்டில் இன்று பெற்றோர்கள் திரண்டு வந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் அறிவுறுத்தியது. தமிழக அரசும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தது. எனினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை மும்முரம் காட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக, பணிக்கு திரும்பவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருமாள்மலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

போராடும் ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் எங்களுக்கு வேண்டாம் என்றும், வேலையில்லாமல் உள்ள பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

அரசு பள்ளிகளை தரமுயர்த்தி, தனியார்ப் பள்ளிகளை வீழ்த்தி வெற்றி பெற வக்கில்லாத, அரசு பள்ளிகளில் சம்பளம் பெற்றுக் கொண்டு தனியார்ப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிற ஜாக்டோ-ஜியோ என்றாலே தமிழக மக்கள் கடுப்பாகிறார்கள்.

சம்பளம் போதாதவர்களை விடுவித்துவிடு! வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களாக வேலைகொடு என்கிறார்கள் தமிழக மக்கள். தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு, இந்தச் சமுதாயத்தில் நீட் போன்ற தேர்வுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிற பாமரத் தமிழ் மக்களுக்கு கோபம் வருவது நியாயம்தானே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,046.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.