Show all

மோடி குறித்த, காங்கிரசின் மலிவான பேச்சுக்களை, மகிழ்ச்சியோடு பகிர்ந்து வரும் பாஜக

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் முன்னாள் நடுவண் அமைச்சர் விலாஸ் முட்டம்வார் பேசியது சமூக வலைத்தளங்களில் தீயாகப்பரவி வருகிறது. விலாஸ் முட்டம்வார் பேசுகையில், 'நீங்கள் தலைமை அமைச்சராக வருவதற்கு முன் உங்களை யாருக்கேனும் அடையாளம் தெரியுமா? இப்போதுகூட உங்களின் தந்தையின் பெயர் குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையின் பெயர் அனைவருக்கும் தெரியும்.

இந்த நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியின் தந்தையை யார் எனக் கேட்டால் ராஜீவ் காந்தி என்று அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தியின் பாட்டி யார் என்று கேட்டால், இந்திரா காந்தி என்றும், ராகுல் காந்தியின் கொள்ளுதாத்தா ஜவஹர்லால் நேரு என்று,  ராகுல் காந்தியின்  பரம்பரையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் மோடியின் தந்தையை இன்றுவரை யாருக்கும் தெரியாது' எனப் பேசி இருந்தார். இந்தக் காணொளியை பாஜகவே, தங்களின் கீச்சுப் பக்கத்திலும், பல்வேறு தளங்களிலும், பகிர்ந்து வருகிறது. 

மோடி அரசு: இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இந்திய மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்காத நிலையில், இது போன்ற மலிவான பேச்சுகள் அவர்களுக்கு தேவையில்லாத அனுதாபத்தையே பெற்றுத் தரும் என்பதை காங்கிரஸ் அறியாதா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.