Show all

நாய்க்கறி இல்லை ஆட்டுக்கறிதான் என்றதும், அப்பாடா என்று அமைதியானோம்! ஆனால் தென்கொரியாவின் விருப்ப உணவு நாய்க்கறியாம்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் பத்து லட்சம் நாய்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தென்கொரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்த நாய்க்கறியை, உண்ணும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

நாய்களைக் கொல்ல மின்சாரம் பாய்ச்சும் இயந்திரம், கத்திகள், ரோமங்களை நீக்கும் கருவிகள் ஆகியவற்றைப் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் நாய் வதைகூடங்கள் தென்கொரியாவில் உண்டு.

ஒவ்வொரு கோடைக் காலத்திலும் தென்கொரியாவில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் நாய்களின் இறைச்சியில் செய்யப்பட்ட பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்படும்.

எனினும், அதைவிட கோழி இறைச்சியில் செய்யப்படும் கோழிக் கறி சூப் உள்ளிட்டவற்றை விரும்பும் தென்கொரியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சோலில் நாய் இறைச்சி பரிமாறும் உணவகங்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாக இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை 700 அளவுக்கு குறைந்தன.

தென்கொரிய மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கத் தொடங்கி விட்டதால் நாய்க்கறி மோகம் குறையத் தொடங்கியிருக்கிறதாம். ஆனாலும் நாய்கள் வதைகூடங்களை முறைப்டுத்த அங்கு இப்போதுவரை சட்டங்கள் இல்லையாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.