Show all

சரிந்து விழுந்தார் அமித்ஷா! மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு; தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கருத்துப் பரப்புதல் மேடையிலிருந்து இறங்கும்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சரிந்து விழுந்தார்.

மத்திய பிரதேசத்தில் வரும் புதன்கிழமை சட்டமன்றத்; தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 280 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேர்தலையொட்டி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் போபாலில் அசோக் நகரில் அமித்ஷா நேற்று தேர்தல் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டார்.

அப்போது பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்தார். உடனே உடனிருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தூக்கிவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.