Show all

வராலாற்று உண்மையை போட்டு உடைத்த முன்னாள் கிரிக்கெட்வீரர் நவ்ஜோத்சிங் சித்து மீது தமிழர்களுக்கு எந்தக்கோபமும் இல்லை.

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற சித்து, அந்நாட்டு ராணுவ தளபதியைக் கட்டித்தழுவிய சம்பவம் பாஜகவிற்கு கடும் எரிச்சலைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில் இமாசலபிரதேச மாநிலம் கசாலிநகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட சித்து, 'நான் தமிழ்நாட்டிற்கு சென்றால், அங்குள்ள மக்கள் பேசும் தமிழ்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அந்த மாநில மக்களின் உணவுப்பழக்கமும் எனக்கு பிடிக்காது. அம்மாநில கலாசாரம் முற்றிலும் வேறுபட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாபி பேசுகிறார்கள். பஞ்சாப்பில் இருக்கும் கலாசாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது' என்று பேசினார்.

சித்துவின் இந்தப் பேச்சை சர்ச்சைக்குள்ளாக்கி வருகிறது பாஜக. இதுகுறித்து டெல்லியில் பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், 'தென்னிந்தியாவை விட பாகிஸ்தானுடன் அதிக தொடர்பிருப்பதாக சித்து கூறி உள்ளார். இது இந்தியாவை வடக்கு, தெற்கு என பிரிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி. பாகிஸ்தான் நாட்டின் மீது உள்ள தனது பாசத்தை சித்து மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். இம்ரான்கானின் பாகிஸ்தான் அமைச்சரவையில், சித்து சேர்ந்து விடலாம். இதுதான் நாங்கள் அவருக்கு அளிக்கும் அறிவுரை' என்று கூறினார்.

சித்துவின் இந்தக் கருத்துக் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியதாவது: தமிழ்நாடு குறித்து சித்து தெரிவித்துள்ள கருத்திற்காக தென்னிந்தியர்கள் ஒவ்வொருவரிடமும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களின் கட்சி பாகிஸ்தானை நேசிப்பதும், கட்சியினர் பாகிஸ்தானின் புகழ்பாடி வருவதும் தெரிந்ததே. தமிழ்நாடு குறித்து சித்து தெரிவித்துள்ள கருத்திற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும். அதுமட்டுமல்லாது சித்துவையும் மன்னிப்புகேட்க வைக்க வேண்டும் என கூறி உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, வரலாற்று உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். ஹிந்தி மொழியில் எண்பது விழுக்காடு உருது இருக்கிறது. வடஇந்திய மொழிகள் அனைத்திலும் உருது கலப்பு மிக மிக அதிகம். வட இந்தியாவை அதிக காலம் ஆண்ட முகமதியர்களால் தமிழகத்தில் கால்பதிக்கவே முடியவில்லை. முகமதியர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் கலாச்சாரத் தொடர்பு மிக மிக நெருக்கம் என்பது நூறு விழுக்காடு உண்மையே. முகமதிய நாடுகளில் வடஇந்தியர்கள் தான், எளிதாகவும் அதிகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற முடிகிறது.  
 
தமிழர் தோற்றம் குமரிக் கண்டம் என்பதாலும், சோழர்கள் காலத்தில் தமிழக எல்லை மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை என்று விரிவு பட்டிருந்ததாலும், பகையோ உறவோ தென்பகுதியில் தமிழர்களுக்கு அதிக தொடர்பு இருக்கிறது.

முகமதியர்கள், வந்தார்கள் வென்றார்கள் என்று தங்கள் எல்லையை இந்தியாவின் வடபகுதியில், நர்மதைஆறு வரை தங்கள் எல்லையை விரிவு படுத்தியிருந்ததால், வடஇந்தியர்களுக்கு முகமதிய நாடுகளோடு பகையோ உறவோ அதிக தொடர்பு இருக்கிறது. 

வராலாற்று உண்மையை போட்டு உடைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மீது தமிழர்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. தனது அனுபவத்தை வரலாற்றோடு பொருத்திச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.