Show all

உடனடியாகத் தலையிட்டுள்ளது உச்சஅறங்கூற்றுமன்றம்! சாதகம் கொண்டாடப்பட்ட ஒரு சர்ச்சையான வழக்கில்

பெண்ணிடம் நெருங்கி பழகி விட்டு செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் வழக்கில் செவ்வாய் தோஷம் உண்மையா? என்று கேட்டுள்ள அறங்கூற்றுமன்றத்தின் வழக்கின்போக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 
டெல்லி அலகாபாத் பல்கலை கழக பேராசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக கூறி பெண் ஒருவருடன் நெருங்கி பழகிய பின்பு. திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அந்தப் பேராசிரியர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே அந்தப் பேராசிரியர்  மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு அலகாபாத் உயர் அறங்கூற்றுமன்றத்தில் விசாணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் பெண்ணை காதலித்தது உண்மைதான், ஆனால் பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் இருப்பதால் குடும்பத்திற்கு அழிவு ஏற்படும் என்ற அச்சத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறியிருக்கிறார். 

பேராசிரியரின் விளக்கத்தை கேட்ட அலகாபாத் உயர் அறங்கூற்றுமன்றம், அந்த பெண்ணுக்கு உண்மையில் தோஷம் இருக்கிறதா? என்பதைக் கண்டறிந்து ஒரு கிழமைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கையைப் பதிவு செய்ய லக்னோ பல்கலைக்கழக சோதிடத் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் பேராசிரியர் வழக்கில் அலகாபாத் உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவு குறித்து உடனடியாக தலைமை அறங்கூற்றுவர் சந்திரசூட் நேரடியாகத் தலையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உச்ச அறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

அறங்கூற்றுவர்கள் சுதன் துலியா மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய 2 பேர் அமர்வு வழக்கை மீண்டும் விசாரித்தது. வழக்கில் அணியமான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா, இந்த வழக்கில் அலகாபாத் உயர் அறங்கூற்றுமன்றத்தின் உத்தரவு மிகவும் கவலையளிக்கிறது என்றும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அணியமான வழக்கறிஞர் அஜய்குமார் சிங், திருமணம் செய்து கொள்ள சாதகம் காரணம் என்று கூறியதால் இருதரப்பு ஒப்புதலின் பேரிலேயே அலகாபாத் உயர்அறங்கூற்றுமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தாக தெரிவித்தார். 

இதைக் கேட்ட அறங்கூற்றுவர்கள், சாதகம் பார்ப்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கில் சாதகத்தைப் பார்த்து எதற்காக அறிக்கை பதிகை செய்யச் சொன்னார்கள் என்று உண்மையாகவே புரியவில்லை என்று தெரிவித்து, அலகாபாத் உயர் அறங்கூற்றுமன்றத்தின் சாதக ஒப்படைப்பு உத்தரவுக்கு, உச்ச அறங்கூற்றுமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இது குறித்து விளக்கம் அளிக்க இரு தரப்பினருக்கும் கவனஅறிக்கை அனுப்பியும் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்முன்னோர் நிறுவிய இயல்கணிப்பு செய்திகளில் கொஞ்சமாக அடிப்படைகளையும், பேரளவாக இடுகுறியான கற்பனைகளையும் முன்னெடுக்கிறவர்களுக்கு ஆன்மீகம் என்கிற சமஸ்கிருதத் தலைப்பு தளமாக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளின் நடைபழகலில் இருந்து தமிழ்முன்னோர் உருவாக்கிய ஓகக்கலையை இயல்கணிப்பு பெரிதாகக் கொண்டாடவில்லை. அந்த ஓகத்தையே ஆன்மீகத் தலைப்பினர் பேரளவாகக் கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகளின் எண்ணமொழி கற்றலில் இருந்து தமிழ்முன்னோர் உருவாக்கிய மந்திரக்கலையை இயல்கணிப்பு பேரளவாகவும் நிறைவாகவும் கொண்டாடுகிறது.

இயல் கணிப்பில் தமிழ்முன்னோர் நிறுவியுள்ள மூன்று முன்னேற்றக்கலைகள் 
1. சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம்
2. கணியம்
3. மந்திரம்.
இவற்றுள் நிமித்தகத்திற்கு 40 மதிப்பெண்கள் வழங்கி அதனினும் மேம்பட்ட கலையான கணியத்தை இரண்டாவது முன்னேற்றக்கலையாக நிறுவினர் தமிழ்முன்னோர்.

இரண்டாவது முன்னேற்றக்கலையான கணியத்திற்கு 60 மதிப்பெண் வழங்கி அதனினும் மேம்பட்ட கலையான மந்திரத்தை மூனறாவது முன்னேற்றக்கலையாக நிறுவினர் தமிழ்முன்னோர்.

அந்த மந்திரம் கற்றலுக்கு எண்பது மதிப்பெண்ணும் தங்கள் தலையெழுத்தை தாங்களே எழுதிக்கொள்ளும் வகைக்கு மந்திரம் கட்டி ஓதுவதற்கு 90 மதிப்பெண்களும், நமது மந்திரத்தை ஒருங்கிணைக்கும் கடவுள், நமது மந்திரக்கேட்பை நிறைவேற்றித்தர நமது எண்ணத்தில் மீட்டும் வேலைகளை முடித்துத் தருவதற்கு 100 மதிப்பெண்களும் வழங்கி மந்திரத்தை வாழ்க்கையின் நிறைவுக்கு நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். 

இது இந்த வழக்கோடு ஒப்புநோக்கத்தக்கதும் தொடர்ந்து நாம் பதிவிட்டு வருவதுமான செய்தியாகும். ஆகவே, சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் நம்முடையதெனக் கொண்டாடுவோம்! எனினும், முன்னேற்றத்திற்கு அதன் மேம்பாடுகளில் களமாடுவோம். என்று நிமித்தகத்தைக் கொண்டாடுகிற அனைவரும் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது வேண்டுகோள் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,665.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.