Show all

சாம்சங்கின் எம்வரிசை மிடுக்குப்பேசிகள் எம் என்றால் மலிவா! ஆம் சியோமியைச் சமாளிக்கவாம் இந்த எம்வரிசை மிடுக்குப்பேசிகள்

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய செல்பேசி சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் புதிய மிடுக்குப்பேசிகளை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் சீன செல்பேசி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் குறுகிய கால கட்டத்திலேயே சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதனால் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்த சாம்சங் நிறுவனம் அந்த இடத்தை இழந்தது. தற்பொழுது சியோமி நிறுவனமே மிடுக்குப்பேசிகள் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. 

இந்நிலையில் போட்டியைச் சமாளிக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம் என்ற புதிய வரிசையின் கீழ் இந்த மிடுக்குப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மாத இறுதியில் கேலக்ஸி எம்10, எம்20 மற்றும் எம்30 என்ற மூன்று மிடுக்குப்பேசிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஜயோமி நிறுவனத்தின் ரெட்மி மிடுக்குப்பேசிகளில் மின்கலம், தொடுதிரை போன்ற வசதிகள் கூடுதல் திறனில் இருப்பதால்தான் பலரும் அதை வாங்க விரும்புகிறார்கள். 

எனவே அதற்கேற்றவாறு இந்த கேலக்ஸி எம் வரிசை மிடுக்குப்பேசிகளும் பெரிய மின்கலம், பெரிய தொடுதிரை போன்றவற்றைக் கொண்டிருக்கும். அமேசான் இணையதளத்தில் இந்த மிடுக்குப்;;பேசிகள் விற்பனைக்கு வரும். இந்த மிடுக்குப்பேசிகள் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மிடுக்குப்பேசி எம்20 தகுதிப்பட்டியல் மற்றும் விலை குறித்த  தகவல் கசிந்திருக்கிறது. தகுதிப்பட்டியலில் மாற்றம் இருக்காது. விலையில் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கலாம்.

இணையம்: ஜிஎஸ்எம், எச்எஸ்பிஏ, எல்டிஈ

தொடுதிரை: 6.3அங்குலம்.

பின்பக்க படக்கருவி: 13எம்பியும் 5எம்பியும் என இரட்டைப் படக்கருவி 

தம்படப் படக்கருவி: 8எம்பி

இயங்குதளம்: ஆண்டிராய்டு  8.1ஓரியோ

சேமிப்பகம்: 32, 64 ஜிபி

மின்கலம்: 5000எம்ஏஎச்

விலை: 17990 எதிர்பார்க்கப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,034.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.