Show all

நிலாவில் பருத்தி முளைத்ததாக, மகிழ்ச்சியில் சீனா! அமெரிக்க சுற்றிய பூவே இன்னும் காதில்தான் இருக்கிறது; சீனா காதில் ஒன்றும் பூச்சுற்றவில்லையே

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலாவில் தரை இறங்கிய சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது.

நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய 'சேஞ்ச்- 4' விண்கலம் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், நிலவின் தரையில் ஊர்ந்து ஆய்வு செய்து வரும் 'யாடு' என்ற கலமும் தனியாக ஆய்வு நடத்துகிறது.

இந்நிலையில் சீன விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 'சேஞ்ச் -4' விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கி உள்ளன. இதன் மூலம் அங்கு உயிரினங்கள் வாழும் சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உருளைக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களையும் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பூமியை போலவே நிலவிலும் பயிர்கள் வளர்ந்தால், மனிதகுடியேற்றத்திற்கு நாள் குறிக்க முடியும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,034.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.