Show all

விசால் திருமணம் குறித்த அடுத்த கட்ட செய்தி!

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விசால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிசா ரெட்டி என்கிற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரின் தந்தை ஜி.கே. ரெட்டி தெரிவித்தார். 

இது காதல் திருமணம் என்று விசால் கூறினார். மேலும் தனது திருமண விபரங்களை தானே வெளியிடுவதாக கூறியிருந்தார். 

தான் விசாலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது திருமணம் குறித்த தகவலை பொங்கல் திருநாளில் அறிவித்துள்ளார் அனிசா. ஹைதராபாத்தை சேர்ந்த அனிசா ரெட்டி அமெரிக்காவில் படித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவர் விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புலு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நன்றாக பாடுவார், நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும், புத்தகம் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளார், மலையேற்றம் செல்பவர். 

விசால், அனிசா திருமணம் இரண்டொரு மாதங்களில் நடக்கும் என்று கூறப்படுகிறது. விசால் ஏற்கனவே தெரிவித்தபடி நடிகர் சங்க கட்டிடத்தில் தான் அவரின் திருமணம் நடக்க உள்ளதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,034.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.