Show all

சனவரி 1 முதல் எந்நேரமும்பணம் மையங்களில் ரூ.4,500 எடுக்கலாம்

சனவரி 1 முதல் எந்நேரமும்பணம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்தேய இருப்புவங்கி அறிவித்துள்ளது.

     அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று கிழமைக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

     எந்நேரமும் பணம் மையங்களில் இருந்து ஒரு பற்றுஅட்டை மூலம் நாளொன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது. சனவரி 1 முதல் இது அமலுக்கு வருகிறது.

     அதே நேரத்தில் வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும்போது கிழமைக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. ஆனால், இந்த 24,000 ரூபாய், புதிய 500 ரூபாய் தாள்களாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     முன்னதாக, கடந்த நவம்பர் 8 லிருந்து பழைய ரூ.500, ரூ.1,000 தாள்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு எந்நேரமும்பணம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.