Show all

கொள்ளை அடிப்பதும், சொத்து குவிப்பதும் ஒரே வகையினவா! நீரவ் மோடி, ஜெகத்ரட்சகன்

நீரவ் மோடி- கடன் வாங்கி ஏமாற்றி விட்டு, வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என்கிறோம். இவரைக் கொள்ளையடித்தவராகக் காண முடிகிறது. சசிகலாவை சொத்து குவித்தவராக சிறையில் அடைத்து விட்டோம். நடப்பு சூடான செய்தியாக ஜெகத்ரட்சகன் சொத்துக் குவிக்கிறார் இலங்கையில், என்று செய்தியை பரபரப்பாக்குகிறோம். இரண்டும் ஒரே வகையினவா? ஆய்வு வேண்டாவா!

  09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து ரூ.13,500 கோடி பணத்தினை முறைகேடு செய்து தலைமறைவானர். அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்தியக் காவல் துறை.

இலண்டன், வெஸ்ட் எண்டில் இருக்கும் செண்டர் பாய்ண்ட் அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரை கைது செய்துள்ளனர் காவல் துறையினர். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நீரவ் மோடியின் மனைவி ஏமி மோடி மீதும் பிணையில் வெளி வர இயலாத அளவிற்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோடியிடம் இருந்த விலையுயர்ந்த 11 கார்களை விற்பனை செய்ய அமலக்கத்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கொள்ளையடிப்பு

முன்னாள் நடுவண் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிங்கப்பூர் நிறுவனம் மூலமாக இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாம்.

சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் தோராயமாக ரூ.26000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் அண்மையில் அறிவித்தது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் தேசிய ஒழுங்குமுறை கணக்கு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப் பட்டுள்ள நிறுவனம் ஆகும்.

அதன் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் நிஷா, ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகன் அனுசுயா உள்ளிட்டோர் இருப்பதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர்களில் ஒருவரான சந்தீப் ஆனந்த் முன்னாள் நடுவண் அமைச்சரும் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளருமான ஜெகத்ரட்சகனின் மகன், நிஷா அவரது மகள், அனுசுயா அவரது மனைவி ஆவார்.

இந்த மூவரையும் இயக்குநர்களாகக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் தோராயமாக ரூ.26000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த வர்த்தக திட்டத்தில் 70 விழுக்காடு நிதியை சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் முதலீடு செய்யும் என்றும் எஞ்சிய தொகையான ரூ11142 கோடி நிதியை அந்நிறுவனம் பங்குகள் மூலமாக திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

ஆனால், சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதலீட்டில் இந்திய வர்த்தக தொடர்பு இருப்பது குறித்து இலங்கை முதலீட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ரூ.26000 கோடி அன்னிய நேரடி முதலீடு குறித்த பொதுவான தகவலை மட்டுமே இலங்கை முதலீட்டு வாரியம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஓமன் அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம் மற்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கூட்டு நிதியுதவியோடு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு வர்த்தக திட்டத்துக்கான பணிகள் வெகுவிரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால், இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே (புதன்கிழமை) இந்தத் திட்டத்தில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று ஓமன் எண்ணெய் அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இத்தகைய சூழலில் இலங்கை முதலீட்டு அமைச்சகம் ஓர் விளக்கத்தை வெளியிட்டது.

அதில், 'எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் பங்குகள் தொடர்பாக ஓமன் எண்ணெய் அமைச்சகத்துக்கும் சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்படும் என்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் வாரியத்திடம் நம்பிக்கை அளித்துள்ளது' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக முன்னாள் நடுவண் இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறும்போது 'இதில், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே தொடக்க  நிலையில்தான் இருக்கின்றன. இப்போதுதான் விண்ணப்பித்திருக்கிறோம். அதன் மீது அரசு பரிசீலனை செய்து வருகிறது. எங்கள் சொந்த நிறுவனம் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர் என்றார்.

கடன் வாங்கி ஏமாற்றி ஓடுதல் நடவடிக்கையில்  நிரவ்மோடி, மல்லையா என்று தமிழர் அல்லாதவர் பட்டியல் நீள்கிறது ; உலகளாவியும் பரவிநிற்கிறது. ஆனால் சொத்துக் குவிப்பு என்பது மட்டும் தமிழர்களைச் சுற்றியே வட்டமடிக்கிறதே ; தமிழர்களை சுழிப்பதற்கானதா சொத்துக்குவிப்பு என்கிற தலைப்பு ; ஆய்வு வேண்டாவா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,100.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.