Show all

சந்தைவீழ்ச்சி காரணம்! வரவு-செலவுத்திட்டத்தில் விதிக்கப் பட்ட பெருமுதலாளிகளுக்கான வரி விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளதாம்

வரவு செலவுத் திட்டம் அறிவிப்பிற்குப் பின் இந்திய சந்தையிலிருந்து சுமார் 22.5 பில்லியன் ரூபாய் தொகை வெளியேறியுள்ளது. இவை அனைத்தும் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்குள் நடந்துள்ளது. இதனால் வரவு-செலவு திட்டத்தில் பெருமுதலீட்டாளர்களுக்கு விதிக்கப் பட்ட கூடுதல் வரி விலக்கிக்கொள்ளப் படுகிறதாம்.

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் செய்ததைப் போலவே சரியான திட்டமிடல் இன்றி பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன நிதிஅமைச்சர் நிர்மலாசீதாராமன் வரவு-செலவுத்திட்டத்தில். 

இந்த அறிவிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல மக்களின் வேலைவாய்ப்பு, பல முதன்மைத் துறைகளின் வளர்ச்சி, முதலீட்டாளர்களின் பணம் என அனைத்தும் கேள்விக்குறியாக நிற்கிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது அணியின் ஆய்வுகள் மூலம் - பெரு நிறுவனங்கள், பெரும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகளுக்குக் கிடைக்கும் லாபம் மீது கூடுதல் வரியை விதிப்பதாகப் வரவு-செலவுத் திட்டம் அறிக்கையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பில், விதிக்கப்பட்ட கூடுதல் வரியின் காரணமாக மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, சென்செக்ஸ், நிப்டி என அனைத்து சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் அதிகளவிலான இழப்பை சுமார் 49 நாட்கள் சந்தித்தனர். இதுமட்டும் அல்லாமல் இந்திய ரூபாய் ஆசிய சந்தையிலேயே மிகவும் மோசமான நாணயம் என்ற நிலையும் அடைந்துள்ளது.

வரவு செலவுத் திட்டம் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரி அன்னிய நிறுவன முதலீட்டாளர்களையும், தனிநபர் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களையும் அதிகளவில் பாதித்தது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிய முதன்மைக் காரணம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்பதே.

இந்த அறிவிப்பின் மூலம் கோபம் அடைந்த அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் செய்திருந்த முதலீட்டை அதிகளவில் வெளியே எடுத்தனர். இதனால் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

வரவு செலவுத் திட்டம் அறிவிப்பிற்குப் பின் இந்திய சந்தையிலிருந்து சுமார் 22.5 பில்லியன் ரூபாய் தொகை வெளியேறியுள்ளது. இவை அனைத்தும் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்குள் நடந்துள்ளது.

22.5 பில்லியன் ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் வெளியேறிய காரணத்தால் இந்திய பங்குகளின் மதிப்பு சுமார் 14.7 டிரில்லியன் ரூபாய் அளவில் சரிந்து முதலீட்டாளர்களைக் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது. 

நிர்மலா சீதாராமன் அறிவித்த கூடுதல் வரியின் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் 14 பில்லியன் ரூபாய் தான். ஆனால் தற்போதும் நாம் இழந்துள்ளது 14.7 டிரில்லியன் ரூபாய்.

இதைச் சமாளிக்க முடியாத நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதியமைச்சகம், வரவு செலவுத் திட்டம் அறிக்கையில் அறிவித்த பெருமுதலீட்டர்களுக்கான இந்த கூடுதல் வரியை திரும்பப்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,258.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.