Show all

விளையாட்டால், விளையாட்டாய், வருமானத்தை வாரிவாரி குவிக்கும் தங்கமங்கை பிவி சிந்து!

இந்தியாவில் பல பெண் விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் தரஅடையாள மதிப்பு மற்றும் பிற காரணிகளைப் பார்க்கும் போது பிவி சிந்து தான் வர்த்தக ரீதியில் முதல் இடத்தில் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இவர் அடைந்த வெற்றிகள் இவருடைய தரஅடையாள மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. 

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பு.வெ.சிந்து இறகு பந்து விளையாட்டில் இந்தியாவின் தங்கமங்கையாக சாதனை புரிந்தவர்.

இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக ஏழாண்டுகளுக்கு முன்பு  வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார்.

இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து குவிக்கும் வெற்றிகளின் மூலம் இனி வரும் காலத்தில் அவருடைய தரஅடையாள மதிப்பு இரட்டிப்பாகும் என முன்னணி விளையாட்டுத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.   

விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் நடுவிலான பு.வெ.சிந்துவின் தரஅடையாள மதிப்பு தற்போது இருக்கும் 1-1.5 கோடி ரூபாயில் இருந்து குறைந்தபட்சம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் இவரின தரஅடையாள மதிப்பு 3 கோடி ரூபாய் வரையில் உயரும் எனப் பேஸ்லைன் வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் துகின் மிஷ்ரா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பல பெண் விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் தரஅடையாள மதிப்பு மற்றும் பிற காரணிகளைப் பார்க்கும் போது பிவி சிந்து தான் வர்த்தக ரீதியில் முதல் இடத்தில் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இவர் அடைந்த வெற்றிகள் இவருடைய தரஅடையாள மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. 

இதுவரை பு.வெ.சிந்து 14 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். யோனக்ஸ், ஜேபிஎல், பிரிட்ஜ்ஸ்டோன், மூவ், பாங்க் ஆப் பரோடா மற்றும் கேட்ரோடா ஆகிய நிறுவனங்கள் இதில் அடக்கம். இந்த 14 ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 40 கோடி ரூபாய் ஆகும்.   

பு.வெ.சிந்து சீன விளையாட்டு நிறுவனமான லெய் லின்ங் உடன் நான்கு ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 5.5 மில்லியன் டாலர் வருமானத்துடன் இருக்கும் பு.வெ.சிந்து உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளதாகப் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,258.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.