Show all

திமுக இல்லாத காங்கிரசோடு வரும் நாடளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கத் தயார்: தினகரன்

17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்து எங்களை அணுகும் பட்சத்தில் அவர்களுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அகில இந்திய அளவில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதே போன்று பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்சியை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க தயார் என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளர் தினகரன் இன்று பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற பாராளுமன்றத்  தேர்தலில் கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது. திமுக கூட்டணியில் இருந்து விலகி எங்களை அணுகும் பட்சத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,867.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.