Show all

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒருவர் காவல்துறையில் புகார்

17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் தலைமையில் 100 நாள் நிகழ்ச்சியாக ஒரு விஜய் தொலைகாட்சி பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதன் முதல் பாகம் மக்கள் நடுவே பெரும் வெற்றியை பெற்று தந்தது ஆனால் இதன் இரண்டாம் பாகம் அவ்வளவாக எடுபடவில்லையென்றே மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது. 

இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ்-2-ல் சர்வாதிகாரி என்ற ஒரு வேலை கொடுக்கப்பட்டது. இந்த வேலையில் சர்வாதிகாரியாக உள்ள ஐசுவர்யா பொதுமக்களை கொடுமை படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். 

இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என வழக்கறிஞர் லூயிசான் ரமேஷ் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் இதன் அடிப்படையில் பிக்பாஸ்-2, பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நடத்தி வரும் தனியார் நிறுவனம் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக சர்வாதிகாரி என்றாலே இட்லர் முசோலினியை மட்டுமே குறிப்பது வழக்கம். பெண் என்பதால் செயலலிதா என்று வைத்துக் கொண்டாரா புகார்தாரர் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியோடு செயலலிதா அவர்களை ஒப்பிட்டு புகார் அளிப்பது தான் செயலலிதாவை அசிங்கப்படுத்தும் என்று அவரது அறியமையை பிக்பாஸ்-2 பார்வையாளர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,867.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.